Try Windows 11 in your Web Browser

 

Try Windows 11 in your Web Browser மைரோசாப்ட் விண்டோஸ் 11 பதிப்பின் Insider Preview எனும் முன்னோட்ட வெளியீட்டை பல டெக் ஆரவலர்கள் தங்கள் கணினியியில் நிறுவிப் பயன் படுத்திப் பார்த்திருப்பார்கள்.

அவ்வாறு நிறுவித் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்களுக்காக விண்டோஸ் 11 பதிப்பின் முன்னோட்ட வெளியீட்டைக் கம்பியூட்டரில் நிறுவாமலே உங்கள் வெப் பிரவுசரிலேயே பயன் படுத்திப் பார்க்கக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது ஒரு இணைய தளம்.

ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பர் ப்ளூஎட்ஜ் என்ற ஊடாடக்கூடிய (interactive) வலைத்தளத்தில் விண்டோஸ் 11 ஐ இணைய உலாவியின் மூலம் பயன் படுத்தக் கூடியவாறு உருவாக்கியுள்ளார்.

எனினும்  அது முழுமையான விண்டோஸ் 11 போன்று செயற்படவில்லை. இந்த வலைத்தளம் விண்டோஸ் 11 இல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை அம்சங்களின் ஒரு டெமோவை (மாதிரி) மட்டுமே காண்பிக்கிறது. ஸ்டார்ட் மெனு மற்றும் சில அப்லிகேசன்களை நீங்கள் இயக்கிப் பார்க்க முடியும்.

இது ஒரு மெய்நிகர் இயந்திரம் (virtual machine) போன்றும் செயற்படவுமில்லை. இருந்தாலும் இது விண்டோஸ் 11 எவ்வாறு இருக்கும் என்பது பற்றி ஓரளவு அறிந்து கொள்ள  முடிகிறது. ப்ளூஎட்ஜ் பாதுகாப்பானது, இயக்குவதற்கு எளிதானது. விண்டோஸ் 11 பயன்பாட்டின் உணர்வை உங்களுக்கு வழங்குகிறது.

மேலும் ப்ளூஎட்ஜ் கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) உரிமம் பெற்றுள்ளது. பதிப்புரிமை மீறலுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் ப்ளூஎட்ஜின் வலைத்தளத்தை முடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் ப்ளூஎட்ஜ் விண்டோஸ் 11 டெமோ இணையதளத்தில் இன்னும் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

https://youtu.be/NDvTltGwexY

இதே ஆட்டிக்கல் கோராவில்