Microsoft introduces Passwordless Sign-In option
Microsoft introduces Passwordless Sign-In option மைக்ரோசாப்ட் பயனர்கள் தங்கள் கணக்கிலிருந்து கடவுச்சொல்லை இனி முழுவதுமாக நீக்க முடியும். பதிலாக மைக்ரோசாஃப்ட் அங்கீகார செயலி (Microsoft Authenticator app) அல்லது விண்டோஸ் ஹலோ Windows Hello போன்ற ஒரு பாதுகாப்பு குறியீடு அல்லது உங்கள் மொபைல் தொலைபேசிக்கு அனுப்பப்படும் சரிபார்ப்பு குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையலாம். இந்த அம்சம் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடவுச்சொற்களை நினைவில் கொள்வது கடினம் மற்றும் அவற்றை ஹேக் செய்யக் கூடியதாகவும் இருப்பது போன்ற காரணங்களால் மைக்ரோசாப்ட் கடவுச்சொற்களை விரும்பாது போயிற்று.
பலவீனமான கடவுச்சொற்கள், நிறுவன மற்றும் நுகர்வோர் கணக்குகளில் பெரும்பாலான தாக்குதல்களுக்கான நுழைவு புள்ளியாகும். ஒவ்வொரு நொடியும் 579 கடவுச்சொல் தாக்குதல்கள் நிகழ்கின்றன - இது ஒவ்வொரு ஆண்டும் 18 பில்லியன் ஆகும். என மைக்ரோசாப்டின் அறிக்கையொன்று கூறுகிறது.
கடவுச்சொற்கள் மிகவும் எரிச்சலூட்டும் அதே வேளை குறைந்த பாதுகாப்பான விஷயங்களில் ஒன்றாகும். மைக்ரோசாப்டின் கணக்கெடுப்பில், 30 சதவீத மக்கள் தங்கள் கடவுச்சொல்லை நினைவில் கொள்ள முடியாததால் கணக்கு அல்லது சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகின்றனர். மேலும் கடவுச்சொல் மீட்டமைப்பைக் கையாள்வதை விட அவர்கள் கணக்கைக் கைவிடுகிறார்கள் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
மைக்ரோசாஃப்ட் முதன்முதலில் விண்டோஸ் 10 க்கான கடவுச்சொல் இல்லாத உள்நுழைவுகளை 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது, அங்கு பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லிற்குப் பதிலாக முக அங்கீகாரம் (Facial Recognition), கைரேகை (Finger print) அல்லது பின் (PIN- Personal Identification No) மூலம் தங்கள் கணினிகளில் உள்நுழைய முடியும்
கடவுச்சொல்லைக் கைவிட்டு, பதிலாக மைக்ரோசாஃப்ட் அங்கீகார செயலியைப் பயன்படுத்த, பயனர்கள் முதலில் மைக்ரோசாஃப்ட் அங்கீகார செயலியை (Microsoft Authenticator app) ஐ உங்கள் மொபைலில் நிறுவ வேண்டும். அடுத்து, உங்கள் மைக்ரோசாஃப்ட் கணக்கினுள், உள்நுழைந்து, மேம்பட்ட பாதுகாப்பு விருப்பங்களைத் (Advanced Security options) தேர்ந்தெடுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.azure.authenticator&hl=en
அங்கு கூடுதல் பாதுகாப்பு விருப்பங்களின் (Additional Security Options) கீழ், கடவுச்சொல் இல்லாத கணக்கை (Passwordless Account) நீங்கள் காண்பீர்கள். அதனை இயக்கி (Turn on) அடுத்தடுத்த திரையில் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மைக்ரோசாஃப்ட் அங்கீகார செய்லியின் தோன்றும் அறிவிப்பை அங்கீகரிக்க வேண்டும்.
நீங்கள் மறுபடி எப்போதாவது கடவுச்சொல்லை சேர்க்க விரும்பினால் settings பகுதிக்குச் சென்று சேர்க்கலாம்.
இந்த உள்நுழைவு முறையை Outlook, OneDrive, Microsoft Family Safety, உட்பட அனைத்து மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகளுக்கும் பயன் படுத்த முடியும்.
கடவுச்சொல் இல்லாமல் உங்கள் கணக்குகளை அணுக மைக்ரோசாப்ட் புதிய வசதி