BlueStacks X-Play Android Games in Your Browser

 

BlueStacks X-Play Android Games in Your Browser

PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில்  அண்ட்ராய்டு செயலிகளை இயக்குவதற்கான பிரபலமான  BlueStacks  எனும் எமியுலேட்டர் (Emulator) மென்பொருள் பற்றி அறிந்திருப்பீர்கள். எனினும் தற்போது ப்ளூஸ்டாக்ஸிற்கு மாற்றாக ஏராளமான அண்ட்ராய்ட் எமியுலேட்டர்கள் பயன் பாட்டிற்கு வந்திருப்பதால், BlueStacks   நிறுவனம் எமியுலேட்டரைத் தாண்டி அண்ட்ராய்டு கேம்களை கிளவுடிற்கு நகர்த்தியிருக்கிறது. அதாவது ப்ளூஸ்டாக்ஸ் எக்ஸ் எனும், உலகின் முதல் கிளவுட் அடிப்படையிலான அண்ட்ராய்டு கேமிங் சேவையை அற்றிமுகப்படுத்தியுள்ளது BlueStack நிறுவனம்  

ப்ளூஸ்டாக்ஸ் எக்ஸ் கிளவுட் கேமிங் சேவை தற்போது பீட்டா பதிப்பில்  உள்ளது இதன் மூலம் உங்கள் கம்பியூட்டரில் உள்ள இணைய உலாவியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்ட்ராய்டு கேம்களை டவுன்லோட் செய்யாமலேயே விளையாட உதவுகிறது.

BlueStacks X-Play Android Games in Your Browser

ப்ளூஸ்டாக்ஸ் எக்ஸ் மூலம், உங்களுக்கு விருப்பமான உலாவியைப் பயன் படுத்தி விண்டோஸ் 10 பிசி மற்றும் ஆப்பில் மேக் கம்பியூட்டர்லிருந்து விளையாடலாம்.

BlueStacks X Cloud Games List

  • Lords Mobile: Kingdom Wars
  • Traffic Puzzle – Match 3 Game
  • RAID: Shadow Legends
  • Dragonscapes Adventure
  • Looney Tunes World of Mayhem
  • Star Conflict Heros 3D RPG Online
  • POP! Slots – Free Vegas Casino Slot Machine Games
  • Guild of Heroes: Epic Dark Fantasy
  • Dynasty Scrolls
  • MU ORIGIN 2
  • Evony: The King’s Return
  • War Robots

ப்ளூஸ்டாக்ஸ் நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட கிளவுட் கேம்களுக்கு உறுதியளித்தாலும், தற்போது நீங்கள் விளையாடக்கூடிய ​​12 கிளவுட் கேம்கள் உள்ளன. மேலும் ப்ளூஸ்டாக்ஸ் ஒவ்வொரு வாரமும் புதிய கேம்களைச் சேர்க்கவும் உறுதியளித்திருக்கிறது.

ப்ளூஸ்டாக்ஸ் எக்ஸ் கிளவுட்டில் அண்ட்ராய்டு கேமிங்கை முயற்சிக்க உங்கள் கூகுள், பேஸ்புக் அல்லது டிஸ்கார்ட் (Discord)  கணக்கைப் பயன்படுத்தி ப்ளூஸ்டாக்ஸ் X இல் உள்நுழையலாம்.

Play Android Games in Your Browser-BlueStacks X