Steps Recorder-Windows 10

 

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும் ஒரு  மென்பொருள் கருவி, இது முதலில் விண்டோஸ் 7 பதிப்பிலேயே அறுமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் பெயர் Problem Steps Recorder

உண்மையில் இந்தக் கருவி எந்தச் சிக்கலையும் தீர்ப்பதில்லை. ஆனால் எங்கே சிக்கல் ஏற்படுகிறது என்பதை இந்தக் கருவிமூலம் பதிவு செய்ய முடியும்

அதாவது நீங்கள் கம்பியூட்டரில் செய்யும் ஒவ்வொரு செயலையும் திரைக் காட்சிகளாக (screenshot) படிப்படியாகப் பதிவு செய்கிறது

ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்பதற்கு உதவும் ஒரு  மென்பொருள் கருவி, இது முதலில் விண்டோஸ் 7 பதிப்பிலேயே அறுமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் பெயர் Problem Steps Recorder

.பதிவு செய்து முடிந்ததும் அத்திரைக் காட்சிகளை ஒரு ஷிப் ஃபைலாக (zip file)  சேமிக்க முடியும்.

பின்னர் அந்த ஷிப் ஃபைலை சிக்கலைத் தீர்க்க உதவி பெற விரும்பும் நபருக்கு மின்னஞ்சலிலோ வாட்சப் மூலமாகவோ அனுப்பி அவரிடம் உதவி கோரி உங்கள் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

கம்பியூட்டரில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்னவென்று  உங்களால் சரியாக விவரிக்க முடியாதபோது இந்தக் கருவி மிகுந்த பயனளிக்கிறது.

ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் கருவியை விண்டோஸ் 10 இல் உள்ள ஸ்டார்ட் மெனுவிலிருந்து அணுக முடியும்.

Steps Recorder-Windows 10