What is Metaverse?

 

What is Metaverse? மெட்டாவெர்ஸ் (Metaverse) எனும் வார்த்தை "மெட்டா-யுனிவர்ஸ் (Meta-Universe) எனும் வார்த்தைகளிலிருந்து பிறக்கிறது.

மெட்டா எனும் ஆங்கில வார்த்தை அப்பால் (beyond) எனும் அர்த்தத்தைத் தருகிறது. யுனிவர்ஸ் என்பது பிரபஞ்சத்சத்தைக் குறிக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள்.

மெட்டாவெர்ஸ் என்பது நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் உலகை அல்லது மெய் நிகர் உலகையே (virtual world) குறித்து நிற்கிறது.

மெட்டாவெர்ஸ் எனும் எதிர்காலத்தில் வரவிருக்கும்புதிய தொழிநுட்பத்தில் நிஜ உலகும் மெய்நிகர் உலகும் ஒன்றிணைந்து மக்களை பல்வேறு சாதனங்களுக்கு இடையே நகர்த்தவும் மற்றும் ஒரு மெய்நிகர் சூழலில் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது.

இது ஆக்மெண்டட் ரியாலிட்டி (augmented reality), வர்ச்சுவல் ரியாலிட்டி (virtual reality) மற்றும் நிஜ உலகம் (real world) மூன்றும் இணைந்த இணைய வெளியையே (Cyberspace) மெடாவர்ஸ் கொண்டிருக்கும்.

ஆக்மெண்டட் ரியாலிட்டி – நீங்கள் இருக்கும் சூழலை கற்பனைச் சூழலாக மாற்றுகிறது

வேர்ச்சுவல் ரியாலிட்டி – கற்பனையான உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கிறது அல்லது வேறொரு சூழலில் நீங்கள் இருப்பதாக உங்களை உணர வைக்கிறது.

இந்த இணைய வெளியில் நிஜ உலக மனிதர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அங்கு அவதார் (avatar) வடிவத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியும்.

இங்கு கணினி மற்றும் மொபைலிற்குப் பதிலாக, எல்லா வகையான டிஜிட்டல் சூழல்களையும் இணைக்கும் மெய்நிகர் உலகில் நுழைய விஆர் கிலாஸ் (VR Glass) போன்ற ஹெட்செட்டைப் பயன்படுத்த வேண்டும்.

What is Metaverse?

மெட்டாவெர்ஸ் எனும் இந்தக் கருத்தை முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு நீல் ஸ்டீபன்சன் Neal Stephenson எனும் எழுத்தாளர் Snow Crash எனும் தனது அறிவியல் புனைக்கதையில் முன் வைத்தார்.

மக்கள் தங்கள் அவதார்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் உலகம் என அதனை அவர் வர்ணித்தார்.

ராப்லாக்ஸ் (Roblox) ஃபோர்ட்நைட் (Fortnite) போன்ற சில ஆன்லைன் வீடியோ கேம்ஸ்களும் மெட்டாவர்ஸ் கருத்துடனேயே உருவாக்கப்பட்டுள்ளன.

பிரபல ஹாலிவூட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பர்க் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளிவந்த Ready Player One எனும் திரைப்படமும் கூட மெடாவர்ஸுக்கு நிகரான கதையமைப்புக் கொண்டிருந்தது.

மெட்டாவெர்ஸை இரண்டு வகைகளாகைப் பிரிக்கலாம் எனப்படுகிறது.

முதல் வகையில் கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்தி மக்கள் மெய்நிகர் நிலங்களை (virtual land) வாங்கி தங்கள் சொந்த சூழலை உருவாக்க அனுமதிக்கிறது.

இரண்டாவது வகையானது ஓர் எளிய, மெய்நிகர் உலகம். அங்கு மக்கள் அவதார்கள் மூலம் ஒருவருக்கொருவர் சந்தித்து தொடர்பாட முடியும்.

இந்த இரண்டாம் வகையை உருவாக்கவே ஃபேஸ்புக் நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

மெட்டாவெர்ஸ் உருவாக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

மெட்டாவெர்ஸ் பிராஜெக்டில் பணியாற்றவென அடுத்த ஐந்தாண்டு காலத்தில் புதிதாக 10,000 ஊழியர்களை பணிக்கமர்த்தவுமுள்ளது ஃபேஸ்புக்.

மேலும் கூகுலின் ஆல்ஃபாபட்போல்-Alphabet(அல்லது ஆல்ஃபாபட்டின் கூகுல் போல்), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் மற்றும் ஆக்கியுலஸ்-Oculus ஆகியவற்றை மெட்டாவர்ஸை மையப் படுத்திய ஒரு புதிய தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வர இருக்கிறது ஃபேஸ்புக்.

அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது மெடாவர்ஸ் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

ஆனால் மெட்டாவர்ஸ் எனும் மெய் நிகர் உலகை ஒரே இரவில் உருவாக்கிவிட முடியாது எனவும் இத்திட்டம் நிறைவு பெற இன்னும்10 முதல் 15 வருடங்கள் செல்லலாம் எனவும் கூறுகிறது ஃபேஸ்புக்.

மெட்டாவெர்ஸ் - இண்டர்நெட்டின் அடுத்த பரிமாணம்.