In-flight Internet service .. How?



In-Flight Wi-Fi விமானத்தில் வைஃபை இணைப்புக்கு ஏர்-டு-கிரவுண்ட் (air-to-ground) சிஸ்டம் மற்றும் செயற்கைக்கோள் (satellite link)  இணைப்பு என இரண்டு வழிகள் பயன் படுத்தப்படுகின்றன.

ஏர்-டு-கிரவுண்ட் சிஸ்டம் என்பது தரை வழி அடிப்படையிலான அமைப்பாகும்,இது செல்போன்களில் பயன் படுத்தும் மொபைல் டேட்டா நெட்வொர்க்கைப் போலவே செயல்படுகிறது. ஆனால் மொபைல் டேட்டா டவர்களைப் போலல்லாமல் இங்கு டவர்கள் சிக்னலை மேல்நோக்கி சிக்னல்களைத் அனுப்புகிறது.

விமானங்களின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும் ஆண்டெனாக்கள் இந்தக் டவர்களிலிருந்து கோபுரங்களிலிருந்து சிக்னல்களைப் பெற்று விமானத்தில் உள்ள சேவையகத்திற்கு அனுப்புகின்றன.

இந்த சிக்னல்களை , பயணிகளுக்கு வைஃபை ஊடாக வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த டவர்கள் (கோபுரங்கள்) இணைய சேவை சேவை வழங்குநர்களால் பராமரிக்கபடுகின்றன.

செயற்கைக்கோள் அடிப்படையிலான வைஃபை அமைப்பில், விமானங்களின் மேற்புறத்தில் சேட்டலைட் ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆண்டெனாக்கள் பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களிலிருந்து சமிக்ஞைகளைப் பெறுகின்றன.

செயற்கைக்கோள் மற்றும் விமானம் ஆகிய இரண்டும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதால், ஆன்டெனாக்கள் சமிக்ஞைகளைப் பெறுவதற்குத் தங்கள் நிலையைத் தொடர்ந்து சரிசெய்து கொண்டிருக்க (adjust / align) வேண்டும்.

இந்தச் செயற்கைக்கோள்கள் இணைய சேவை வழங்குநர்களால் இயக்கப்படும் செயல்பாட்டு மையங்களுடன் (operation centers) இணைக்கப்பட்ட தரை நிலையங்களுடன் (earth stations) இணைக்கப்பட்டுள்ளன.

கோபுரங்கள் இல்லாத இடத்தில் விமானம் பறக்கும்போது, ஏர்-டு-கிரவுண்ட் அமைப்பிற்கு பதிலாகச் செயற்கைக்கோள் வைஃபை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.

விமானத்தில் வைஃபை சேவைகளை வழங்குவது சாத்தியமானாலும் வைஃபை சேவையானது தரையை விட வேகம் குறைந்ததாகவும் அதிக செலவு மிக்கதாகவும் உள்ளது.

இதே ஆட்டிக்கல் Quora வில்