Wireless Access Point என்றால் என்ன?
Wireless Access Point (கம்பியில்லா அணுகல் புள்ளி) என்பது வயர்லெஸ் ரவுட்டர் – wireless router (திசைவி) போன்ற ஒரு சாதனமாகும்,
இது வயர்லெஸ் சாதனங்களை ஒரு வலையமைப்புடன் (network) இணைக்க உதவுகிறது.
அதாவது டெஸ்க்டாப் கணினி, மடிக்கணினி, மொபைல் ஃபோன் போன்றவற்றை வை-ஃபை இணைப்பின் மூலம் இணைக்க உதவுகிறது.
பொதுவாக வயர்லெஸ் ஆக்ஸஸ் பாயின்டுகள் மூலமாக இணைய அணுகலை வழங்குவதற்காக அவை பிராட்பேண்ட் மோடம்கள் (broadband modems) அல்லது ரவுட்டர்கள் போன்ற பிற சாதனங்களுக்களுடன் வயர் மூலம் இணைக்கப்பட வேண்டும்.
அல்லது பிராட்பேண்ட் ரவுட்டரை நெட்வர்க் சுயிட்சுடன் இணைத்து அந்த நெட்வர்க் சுயிச்சுடன் ஆக்ஸஸ் பாயிண்டை இணைத்தும் இணைய அணுகலை வயரின்றி (w-fi) வழங்க முடியும்.
ஆக்ஸஸ் பாயிண்டுகளை விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், எபார்ட்மெட்ண்டுகள் விடுதிகள், பல்கலைக் கழகங்கள் போன்ற இடங்களில் காணலாம்.
சில ஆக்ஸஸ் பாயிண்டுகள் உள்ளமைக்கப்பட்ட (built-in) மோடம் மற்றும் ரவுட்டர்களைக் கொண்டிருக்கும். அவை மோடம், ரவுட்டர் மற்றும் ஆக்ஸஸ் பாயிண்ட் என மூன்றாகவும் தொழிற்படும்.
பெரும்பாலான வீடுகளில், உள்ளமைக்கப்பட்ட மோடம் மற்றும் ரவுட்டர்களைக் கொண்ட ஆக்ஸஸ் பாயிண்டுகளே (வயர்லெஸ் ரவுட்டர்) பயன் படுத்தப்படுகின்றன.
அணுகல் புள்ளிகள் (ஆக்ஸஸ் பாயிண்டுகள்) பொதுவாக இணையத்திற்கு வயர்லெஸ் அணுகலை வழங்கினாலும், சில பாயிண்டுகள் மூடிய நெட்வொர்க்கிற்கான (Closed network) அணுகலை கேபிலின்றி வழங்க்குவதை மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளளன.
அதாவது பெரிய வணிக நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்குத் தமது சேவையகத்திலிருந்து (Servers) பாதுகாப்பாக, வயர்லெஸ் முறையில் கோப்புகளை அணுகுவதற்காகவும் அணுகல் புள்ளிகளைப் பயன் படுத்துகின்றன.