Handwriting Recognition feature in MS Office 2003
கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் தொழில் நுட்பம்
Handwriting Recognition என்பது கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் ஒரு தொழில் நுட்பம். ரைடிங்பேட் (Writing Pad), ஸ்டைலஸ் அல்லது மவுஸை உபயோகித்து திரையில் எழுதுவதை அடுத்த வினாடியே அச்செழுத்தாக (text) மாற்றுகிறது HR engine எனும் இம் மென் பொருள். எம்.எஸ்.வேர்ட் போன்ற சில புரோக்ரம் களில் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றாமல் எழுதியவாறே இன்க் மோடில் (Ink Mode) டொகுயுமென்டில் நுளைத்துக் கொள்ளவும் முடியும். ஹேன்ட் ரைட்டிங் ரெகக்னிசன் வசதி மைக்ரொசொப்ட் ஒபிஸ் தொகுப்பின் எக்ஸ்பீ மற்றும் 2003 பதிப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் ஒபிஸ் தொகுப்பின் அண்மைய பதிப்பான ஒபிஸ் 2007 ல் இது இணைக்கப்படவில்லை. பதிலாக விண்டோஸ் விஸ்டாவில் சேர்க்கப்பட் டுள்ளது.
ஹேன்ட்ரைடிங் ரெகக்னிசனுக்கு ஒத்திசைவு வழங்கும் புரோக்ரம்களில் இன்டனெட் எக்ஸ்ப்லோரர், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மற்றும் மைக்ரோ ஸொப்ட் ஒபிஸ் என்பன குறிப்பிடத்தக்கவை.
ஹேன்ட்ரைடிங் ரெகக்னிசனை செயற்படுத்த ஒரு டிஜி ட்டல் ரைட்டிங் பேட் அவசியம். ரைட்டிங் பேட் இல்லாதிருந்தால் மவுஸையே எழுதுவதற்கு உபயோகிக்கலாம். எனினும் மவுஸை விட ரைட்டிங்பேட் கொண்டு இலகுவாக எழுதலாம். அத்துடன் வின்டோஸ் 98 அல்லது அதற்குப் பிந்திய பதிப்பு நிறுவியிருத்தல் வேண்டும்.
ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசன் ஒபிஸ் எக்ஸ்பி மற்றும் 2003 யுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் ஒபிஸ் தொகுப்பை முழுமையாக நிறுவும் போதே ஹெச்.ஆர் என்ஜினும் நிறுவப்படும்
உங்கள் கணினியில் ஹெச்.ஆர் என்ஜின் நிறுவப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
1. கன்ட்ரோல் பேனலில் Regional and Language Options திறவுங்கள்,
2. Languages டேபில் Text services and input Languages என்பதன் கீழ் வரும் Details பட்டனைக் க்ளிக் செய்யுங்கள்
3. Install Services என்பதன் கீழ் வரும் Add பட்டனைக் க்ளிக் செய்யவும்.
4. Handwriting Recognition என்பது அங்கு இருந்தால் உங்கள் கMனியில் ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசன் என்ஜின் நிறுவப்பட்டுள்ளது
ஹெச்.ஆர் என்ஜின் நிறுவப்படா திருந்தால் பின்வரும் வழிமுறையில் நிறுவிக் கொள்ளலாம்.
1. கன்ட்ரோல் பேனலில் Add / remove Programs திறந்து கொள்ளவும்.
2. Change or remove Programs க்ளிக் செய்யுங்கள்
3. மைக்ரொசொப்ட் ஒபிஸ் 2003 க்ளிக் செய்த பிறகு Change பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
4. Add / remove features ல் க்ளிக் செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யுங்கள்.
5. Choose advanced customization of applications தெரிவு செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யவும்
6. Features to install என்பதன் கீழ் Office shared features என்பதை இரட்டை க்ளிக் செய்யவும்.
7. Alternative user input என்பதை இரட்டை க்ளிக் செய்யுங்கள். பிறகு Handwriting க்ளிக் செய்யவும். கீழ் நோக்கிய அம்புகுறியில் க்ளிக் செய்து Run from my computer தேர்வு செய்யவும். பிறகு update பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசனை எவ்வாறு செயற்படுத்துவது?
ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசனை அல்லது ஸ்பீச் ரெகக்னிசனை நிறுவும்போது Language Bar என்ற ஒரு டூல்பாரும் டெஸ்க்டொப்பில் வந்து விடும். உள்ளீடு செய்யும் மொழியாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்திருந்தால் டாஸ்க்பாரிலும் வந்துவிடும். வராதிருந்தால் டாஸ்க் பாரின் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் டூல்பார்ஸ் தேர்வு செய்து அதில் வரும் லெங்குவேஜ் பாரை க்ளிக் செய்யவும். டாஸ்க் பாருக்கு வந்ததும் அதன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Restore the Language Bar தெரிவு செய்யவும். இப்போது டெஸ்க்டொப்பில் அதனைப் பார்க்கலாம். அதனை திரையில் எப்பகுதிக்கும் நகர்த்தலாம். மினிமைஸ் செய்யவோ அல்லது க்லோஸ் செய்யவோ அதன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவிலிருந்து தேவையான கட்டளைகளை செயற்படுத்தவும்.
லெங்குவேஜ் பாரை பின்வரும் வழிமுறையிலும் வரவைக்கலாம். எம்மெஸ் வேர்டைத் திறந்து கொள்ளுங்கள். அதில் டூல்ஸ் மெனுவில் ஸ்பீச் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸை கேன்ஸல் செய்து விடுங்கள். லெங்குவேஜ் பாரைத் திரையில் பார்க்கலம்.
ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசனிலும் ஸ்பீச் ரெகக்னிசனிலும் கட்டளைகளை செயற்படுத்துவதற்கான பட்டன்கள் nஇந்த லெங்குவேஜ் பாரிலேயே இருக்கின்றன. இதன் மூலம் உங்கள் தேவைக்கேற்ப அவற்றில் மாறிக் கொள்ளலாம். கையெழுத்தை உள்ளீடு செய்ய லெங்குவேஜ் பாரிலுள்ள ஹேன்ட்ரைட்டிங் என்ற பட்டனில் க்ளிக் செய்யவும். அப்போது ஒரு மெனு தோன்றும் அதில் Writing Pad மட்டுமன்றி Write Anywhere, Drawing Pad , On Screen Keyboard, On Screen Symbol Keyboard எனப் பல வசதிகள் அங்கிருப்பதைக் காணலாம்.
அந்த மெனுவில் ஹேன்ட்ரைட்டிங்கில் க்ளிக் செய்ய ரைட்டிங்பேட் விண்டோ தோன்றும். அதன் வலது பக்க ஓரமாக பட்டன்களையும் காணலாம். அதில் டெக்ஸ்ட் பட்டணை தெரிவு செய்துவிட்டு ரைட்டிங்பேட் விண்டோவில் மவுஸை உபயோகித்து மவுஸின் இடது பக்க பட்டனை அழுத்தியவாறு மவுஸ் பேடின் மீது அதனை நகர்த்தி ஆங்கிலத்தில் எழுதவும். எழுதுவதை நிறுத்திய அடுத்த வினாடியே உங்கள் கையெழுத்தை அறிந்து அதனை டெக்ஸ்டாக மாற்றப்பட்டு எம்மெஸ் வேர்ட் டொகுயுமென்டில் நுளைப்பதைக் காணலாம். எனினும் நீங்கள் எழுதும் விதத்தைப் பொறுத்தே அதன் செயற்பாடு அமையும். அதேபோல் இன்க் மோடில், கையெழுத்து டெக்ஸ்டாக மாற்றப்படாமல் எழுதியவாறே இன்சர்ட் செய்யப்படும். அதனை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த மொழி யிலும் எழுதலாம். இந்த விண்டோவை திரையின் எந்தப் பகுதிக்கும் நகர்த்த முடிவதோடு அதனை விருப்பம் போல் அளவை பெரிது படுத்துக் கொள்ளவும் முடியும்.
ஹேன்ட்ரைட்டிங்கை க்ளிக் செய்ய வரும் மெனுவில் Write Anywhere தேர்வு செய்தால் திரையில் எந்தப் பகுதியிலும் விருப்பம்போல் எழுதலாம். அதற்கும் ஒரு டூல்பார் தோன்றும். அதிலும் டெக்ஸ்ட் மோட், இன்க் மோட் இரண்டயும் செயற்படுத்தலாம்.
அடுத்ததாக உள்ள Drawing Pad மூலம் படங்கள் வரைந்து டொகுயுமென்டுக்குள் நுளைக்கலாம். On-Screen Keyboard மூலம் கீபோட் துணையின்றியே மவுஸை உபயோகித்து இலகுவாக டைப் செய்யலாம். அதேபோல் On-Screen Symbol Keyboard மூலம் விசேட குறியீடுகளை இன்சர்ட் செய்து கொள்ளவும் முடியும்.
-அனூப்-