How to recover deleted files

அழித்த பைலை மீளப்பெறலாமா?

ஹாட் டிஸ்கில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைலை நீங்கள் மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?


விண்டோஸில் ஒரு பைலை அழிக்கும் போது அந்த பைல் அழியாமல் வேறொரு போல்டருக்கு நகர்த்தப்படுகிறது. அந்த போல்டரையே ரீசைக்கில் பின் (Recycle Bin) என்கிறோம். அழித்த அந்த பைலை மீண்டும் தேவைப்பட்டால் ரீசைக்கில் பின்னிலிருந்து எந்த வித சேதமுமில்லாமல் மீட்டுக் கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ரீசைக்கில் பின்னில் அழித்த பைல் இல்லாதபோது அதாவது ரீசைக்கில் பின்னையும் காளி செய்திருந்தால் அல்லது பைலை அழிக்கும் போது Shift கீ யுடன் Delete கீயை அழுத்தியிருந்தால் அல்லது ஏதேனுமொரு வழியில் ரீசைக்கில் பின்னுக்குச் செல்லாமலேய்யே அழித்திருந்தால் நீங்கள் இனிப் பீதி கொள்ள வேண்டியதில்லை. அந்த பைலை மீட்க இன்னும் சந்தர்ப்பமீருக்Bறது.

நீங்கள் கணினியிருந்து ஒரு பைலை அழிக்கும் போது அந்த பைல் நிரந்தரமாக அழிவதில்லை. மாறாக அந்த பைல் பெயர் மட்டுமே அழிக்கப்படுகிறது. அவ்வளவுதான். இருப்பினும் அந்த பைலை விண்டோஸ் எமக்குக் காண்பிப்பதில்லை. ஆனால் அந்த பைல் முழுமையாக அழிந்து விட்டதாக நாம் கருதுகிறோம். எனினும் அந்த பைல் இருந்த இடமானது மேலும் புதிய பைல்களைச் சேமிக்கும் வண்ணம் விண்டோஸ¤க்கு வழங்கப்படுகிறது. எனினும் விண்டோஸ் அந்த இடத்தை உடனடியாகவே பயன்படுத்துவதில்லை. ஆகவே அந்த பைல் சேதமுராமல் சில காலம் ஹாட் டிஸ்கில் அப்படியே தேங்கியிருக்கும். இதனால் அந்த அழித்த பைலை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்Bறது.

இருந்தாலும் அழித்த ஒரு பைலை மீட்க வேண்டுமாயின் அழித்த பிறகு உடனடியாகவோ அல்லது ஒரு சில மாதங்களிலோ மீட்கும்போது மட்டுமே அந்த பைலை முழுமையாக மீட்டுக் கொள்ள முடியும், நாட்கள் செல்லச் செல்ல அந்த பைலை முழுமையாக மீட்கக் கூடிய வாய்ப்பு குறைந்து செல்வதோடு அந்த பைல் ஹாட் டிஸ்கில் இருந்த இடத்தை விண்டோஸ் மீண்டும் உபயோகிக்கத் தொடங்கி விடும்.

அத்துடன் பைல் ஒன்றை அழித்த பிறகு அந்த ஹாட் டிஸ்கை Defragmenting, Partitioning, Formatting போன்ற செயற்பாடுகளுக்கு உட்படுத்துவதாலும் அல்லது ஹாட் டிஸ்க் சேதமுறுவதாலும் பைலை மீட்கக் கூடிய வாய்ப்பு அற்றுப் போகிறது. எனினும் அவ்வாறான செயற்பாடுகளுக்குட்படுத்திய அல்லது சேதமுற்ற ஹாட் டிஸ்கிலிருந்தும் பைல்களை மீட்டுக் கொள்வதற்கு வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விண்டோஸில் பைல்களை விருப்பம்போல் அழிக்க முடிந்தாலும் அழித்த பைலை மீட்கக் கூடிய வசதி விண்டோஸில் இல்லை. இதற்கான மென்பொருள் கருவிகளை வேறு வழிகளிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த மென்பொருள் கருவிகள் அழித்த பைல் பற்றிய விவரங்களை அதன் தடயங்கள் கொண்டு கண்டுபிடித்து மீட்டு விடுகிறது. இவ்வாறான மென்பொருள் கருவிகள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் எவ்வளவு நம்பகமானது என உத்தரவாதமளிக்க முடியாது. நான் அறிந்த அளவில் Uneraser எனும் மென்பொருள் கருவி ஓரளவு சிறப்பாகச் செயல்படுBறது.

எனினும் இந்த பைல் மீட்கும் படலத்தில் நம்பிக்கை வைக்காமல் ஒரு பைலை அழிக்கு முன்னர் ஒரு தடவைக்கு நான்கு தடவை நன்றாக சிந்தித்து விட்டு அதனை அழித்து விடுவதே சிறந்த வழி.


-அனூப்-