How to change your PC into a web server?


உங்கள் கணினியை ஒரு web Server ஆக மாற்றுவது எப்படி?

இணையத்தில் இணைந்து இணைய தளங்கள் / வலைப்பக்கங்களை நாம் பார்க்கும் போது உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஏதோவொரு ஒரு கணினியிலுள்ள வலைப் பக்கங்களை நம் கணினுக்குப் பதிவிறக்கம் செய்து பார்வையிடுகிறோம். இந்த வலைத்தளங்கள் அல்லது வலைப் பக்கங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இத்தகைய கணினிகளையே web Server எனப் படும். இந்த web Server இத்தகவல்களை நமக்கு மட்டுமல்லாமல் அவற்றைப் பெற விரும்பும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்கும் ஆற்றல் பெற்றிருக்கும்.

நமது கணினியையயும் ஒரு web Server ஆக மாற்றிக் கொள்ளும் வசதி Windows XP இயக்கச் சூழலில் (operating syatem) இணைக்கப்படுள்ளது. எனினும் இது Windows Server 2003 போன்ற ஒரு முழு அளவிலான web Server ஆக இயங்காது. வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளுடன் கூடிய இந்த web Server ஐ 10 முதல் 20 கணினிகள் கொண்ட ஒரு வலையமைபில் (network) அக இணையமாக (intranet) அல்லது நாம் உருவாக்கும் வலைத்தளங்கள் முறையாக இயங்குகிறதாவென பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு தனிப்பட்ட பாவனைக்கான web Server ஆகவோ பயன் படுத்திக் கொள்ளலாம்.

IIS எனும் மூன்றெழுத்துக்களால் குறிக்கபடும் Internet Information Server எனும் இந்த மென்பொருட் கருவிகள் Windows XP யின் Professional பதிப்பில் மாத்திரமே உள்ளிணைக்கப்படுள்ளது.

எனினும் Windows XP யை கணினியில் நிறுவும் போது அதாவது default installation இல் இந்த IIS மென்பொருள் நிறுவப்படுவதில்லை. அதனை நாமாகவே நிறுவுவிக்கொள்ள வேண்டும். அதனை நிறுவுவதற்கு உங்களிடம் Windows XP£ Professional Edition CD யை தாயராக வைத்துக் மொள்ள வேண்டும்.

அதனை நிறுவும் முறையும் பின்னர் அதனை configure செய்யும் முறையும் கீழே விவரிக்கப் படுகிறது,

முதலில் Control Panel க்குள் நுளைந்து கொள்ளுங்கள். (Control Panel எங்குள்ளது எனத் தெரியாத PC-Times வாசகர்கள் இருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்) அங்கு Add or Remove Programs click செய்யுங்கள் (படம்-1) அப்போது தோன்றும் dialog box ன் இடப்பக்க ஓரத்தில் Add / Remove Windows Components button (படம்-1) இல் click செய்யுங்கள். அங்கு வரும் Windows Components Wizard ல் Internet Information Services தெரிவு செய்து அடுத்த கட்டத்துக்குச் செல்லவும். (படம்-3 ) அப்போது Windows XP Professional Edition CD யை உட்செலுத்துமாறு கேட்டு நிற்கும். CD யை உட்செலுத்த தேவையான file கள் பிரதி செய்யப்பட்டு IIS மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவப்படுவதை அவதானிக்கலாம். (படம் -4)

இதனை நிறுவியவுடன் உங்கள் (browser) இணைய உலாவியான Internet Explorer ஐ திறந்து அதன் (address bar) முகவரிப் பட்டையில் http://localhost என என type செய்து Enter key யை அழுத்துங்கள். அப்போது படம்-5 ல் உள்ளவா றான உங்கள் சேர்வரின் இல்லப்பக்கத்தை (home page) பார்க்கலாம்.

இங்கு http://localhost என்பதற்குப் பதிலாக localhost க்குரிய IP (Internet Protocol) addess ஆன http://127.0.0.1 என்பதை அல்லது உங்கள் கணினியின் IP முகவரி அல்லது உங்கள் கணினியின் பெயர் (computer name) என்பவற்றையும் உட்செலுத்தலாம். இத்தோடு உங்கள் வேலை முடிந்ததா? இல்லை. இன்னும் தொடருங்கள்.

சேர்வரின் இல்லப்பக்கத்திற்குப் பதிலாக நீங்கள் உருவாக்கிய உங்கள் வலைப்பக்கத்தை இந்த web Server ன் இல்லப்பக்கமாக மற்றிக்கொள்ளலாம். அதற்கு மீண்டும் Control Panel சென்று அங்கு Administrative tools தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் சட்டத்திலிருந்து Internet Information Services தெரிவு செய்யுங்கள் (படம் -6). அதிலிருந்து உங்கள் கணினியின் பெயருக்கு முன்னாலுள்ள ( + ) குறியீட்டில் click செய்ய அதன் கீழ் சில folder கள் பட்டியலிடப்படும். அதிலிருந்து Websites எனும் folder ல் click செய்ய சட்டத்தின் வலப்பக்த்தில் Default Website ஐ க் காட்டும். அதன் மீது வலது click செய்ய வரும் menu விலிருந்து Properties தெரிவு செய்யவும். அப்போது படம்-7 லுள்ளது போன்ற ஒரு dialog box தோன்றும்.

இந்த Default website properties dialog box ல் Documents tab ஐ click செய்ய, default web page ஆக தோன்றச் செய்யக் கூடிய file களின் பட்டியலைக் கானலாம். அதனருகில் காணப்படும் up / down arrow button மூலம் default web page க்குரிய வரிசையை மாற்றலாம். இங்கு index.html file ஐ up arrow button மூலம் பட்டியலில் முதலில் வருமாறு மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது add button ல் click செய்து நீங்கள் விரும்பும் வேறு ஏதெனுமொரு வலைப்பகத்தையும் browser ல் முதலில் வருமாறும் செய்யலாம்.

அடுத்து நீங்கள் உருவாக்கியிருக்கும் வலைப்பக்கத்தை அல்லது தளத்தை பிரதி செய்து c:/inetpub/wwwrooot ல் அதாவது Drive C யில் உள்ள inetpub எனும் folder க்குள் இருக்கும் wwwroot எனும் sub-folder ல் கொண்டு போய்ச் சேருங் கள். இப்போது browser ல் http://localhost என type செய்து Go வில் click செய்ய நீங்கள் உருவாக்கிய வலைப் பக்கத்தைப் பார்க்கலாம்.

இந்த settings எல்லாம் எதற்கு? அதுதான் எந்தவொரு browser மூலமாகவும் நமது வலைப்பக்கத்தை திறந்து பார்க்கலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனல் உங்கள் கணினியில் மட்டுமே அவ்வாறு திறக்கலாமே தவிர வலைப்யமைப்பிலுள்ள வேறொரு கணினியிலிருந்து அந்த file களை அணுக முடியாது. இந்த இடத்தில் தான் web server ன் முக்கியத்துவம் உணரப்படுகிறது.

வலையமைப்பிலுள்ள வேறொரு கணினியிலிருந்து எவ்வாறு இந்த web server ஐ அணுகுவது? அதற்கு நீ£ங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்கள் web browser ல் http://(web server name)/index.html என type செய்ய வேண்டும். (web server name என்பது web server ஆகத் தொழிற்படும் கணினியின் பெயர்) அத்தோடு File menu வில் work offline என்பது தெரிவாகியிருந்தால் அதனை நீக்கி விட வேண்டும். இவ்வாறு வலையமைப்பிலுள்ள எந்தவொரு கணினியிலிருந்தும் இந்த வலைப் பக்கங்களைப் பார்வையிடலாம். இந்த அமைப்பத்தான் அக இணையம் அல்லது Intranet எனப்படும்.

கீழுள்ளதை மாதிரியாகக் கொண்டும் ஒரு வலைப்பக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ள லாம். அதற்கு Notepad ஐ திறந்து கீழுள்ளவாறு type செய்து அதனை index .html எனும் பெயரில் சேமித்துப் பின்னர் அந்த file ஐ மேற்சொன்ன wwwroot எனும் folder ல் சேருங்கள். இப்போது browser இயக்கிப் பாருங்கள்.

-அனூப்-