What is Search Engine ?
Search Engine என்றால் என்ன?
வேர்ல்ட் வைட் வெப் (world wide web) எனும் இணைய சேவைIல் இலட்சக்கணக்கான இணைய தளங்கள் உலகெங்குமுள்ள வெப் சேர்வர்கDல் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த இனைய தளங்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது எம்மால் இயலாத காரியம். அவ்வாறே எந்த இனைய தளத்தில் என்ன தகவல் உள்ளது என்பதும் நாமறியாத விடயம். இணைய உலாவலின் போது ஒரு இணையதளத்தின் பெயரை சரியாகத் தெரியாவிட்டால், அல்லது உங்களுக்குத் தேவையான ஒரு தகவல் எந்த இணைய தளத்தில் உள்ளது எனத் தெரியாத விடத்து எம்மால் ஒரு தகவலைப் பெற முடியாதிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமக்குக் கை கொடுக்கிறது சேர்ச் என்ஜின் எனும் தேடுபொறி. இந்த சேர்ச் என்ஜின் வசதி மட்டும் நமக்கில்லையானால் இணையத்தின் முழுமையான பயனை நம்மால் பெற முடியாது போயிருக்கும்.
சேர்ச் என்ஜின் என்பதை இணைய தளங்களின் பெயர் மற்றும் அவற்றின் உள்ளடக்கம் போன்றவற்றைக் கொண்ட ஒரு பட்டியல் (catalogue) எனலாம். அந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்குத் தேவையான தகவலைப் பெறுவதற்குரிய சொல்லை அல்லது சொற்றொடரை சேர்ச் என்ஜினுக்குரிய வெப் தளத்திலுள்ள கட்டத்தில் டைப் செய்து என்டர் கீயை அழுத்த, அடுத்த கனமே உங்களுக்குத் தேவையான தகவல்களைக் கொண்டிருக்கும் ஏராளமான இணைய தளங்களின் பெயர்களை உங்கள் முன்னே காண்பிக்கிறது இந்தத் தேடுபொறி
சேர்ச் என்ஜின் என்பது எமக்கு ஒரு வழமையான ஒரு இணைய தளம் போன்று எளிமையாகத் தோற்றமளித்தாலும் அது ஒரு விசாலமான தரவுத் தளத்தினை (Data base) தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சேர்ச் என்ஜிமனின் முகப்புப் பக்கத்திலிருந்தே அந்த சேர்ச் என்ஜினின் தரவுத் தளத்தை அடைகிறோம்.
சேர்ச் என்ஜின் கொண்டு தகவல் தேடலில் ஈடுபடும் போது அந்தத் தகவல்கள் அடங்கியிருக்கும் வெப் சேர்வர்களை அதாவது சேர்ச் என்ஜின்கள் வேர்ல் வைட் வெப் முழுவதும் அப்போதே நேரடியாகத் தேட ஆரம்பிப்பதில்லை. ஒவ்வொரு சேர்ச் என்ஜினும் ஏற்கனவே தானியங்கி முறையில் உருவாக்கப்பட்டுள்ள தமது தரவுத்தளங்களில் அடங்கியுள்ள கோடிக் கணக்கான இனைய பக்கங்களிலுள்ள சொற்களில் (text) இருந்தே நாம் தேடும் தகவல் எந்த இணைய தளத்திலுள்ளது என்பதைக் கண்டு பிடித்து நமக்குத் முடிவுகளாகத் தருகின்றன. அதாவது இணைய தேடலில் ஈடுபடும் போது ஒரு இணைய பக்கத்தின் நகலையே சேர்ச் என்ஜின் எமது பார்வைக்குத் தருகிறது. இணைய பக்கங்களிலுள்ள டெக்ஸ்ட் எனப்படும் எழுத்துக்களையோ அல்லது சொற்களையோ சேர்ச் என்ஜின் தேடலில் முடிவுகளாகப் பட்டியலிடுவதோடு அவற்றிற்கு இணைப்புக்களையும் (links) உருவாக்கிக் கொள்ளும். அந்த இணைப்பில் க்ளிக் செய்யும் போது உரிய இனைய தளத்தை நாம் அடைகிறோம். அந்த இணைய தளம் ஒரு வேளை இப்போது புதுப்க்கப்பட்டிருந்தால் அதன் புதிய வடிவையே பார்க்க முடியும் .
சேர்ச் என்ஜினின் தரவுத் தளங்களை உருவாக்கும் கணினி நிJரல்களை ரோபோட் (robot) ஸ்பைடர் (spider) மற்றும் க்ரோலர் (crawler) எனப் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறன. இந்த க்ரோலர்கள் தரவுத் தளத்தில் சேர்ப்பதற்காக ஏற்கனவே தரவுத்தளங்களில் இருக்கும் இணைய பக்கங்களிலுள்ள லிங்ஸ் மூலம் புதிய தளங்களை தேடிச் செல்கின்றன. இந்த க்ரோலர்கள் இனைய தளங்களை அடிக்கடி சென்று பார்வையிடு வதோடு அவை பற்றிய விவரங்களை மாற்றங்களை தரவுத்தளத்தில் குறித்துக் கொள்ளும். ஒரு இணைய தளம் அல்லது ஒரு இணைய பக்கம் வேறொரு இணைய பக்கத்தை இணையாத விடத்து இந்த ரோபோட்டுக்களால் அவற்றைக் கண்டறிய முடிவதில்லை. இவ்வாறான வேறு இணைப்புகள் இல்லாத வெப் தளங்களின் பெயர்களை நாமாக ஒரு சேர்ச் என்ஜினில் சேர்க்க வேண்டியிருக்கும். இந்த வசதியை அனைத்து சேர்ச் என்ஜின் சேவை தரும் நிறுவனங்களும் வழங்குகின்றன.
ஸ்பைடர்கள் புதிதாக இணைய பக்கங்களைக் கண்டறிந்த பின்னர் அது பற்றிய விவரங்களை வேறொரு கணினி நிரலுக்கு (program)அதனை வரிசைப்படுத்தும் பொருட்டு (indexing) வழங்குகின்றன. இந்த கணினி நிரல் அந்த வெப் பக்கத்திலுள்ள எழுத்துக்கள், இணைப்புக்கள் மற்றும் ஏனைய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து சேர்ச் என்ஜினுக்குரிய தரவுத் தளத்தில் இணைய தளங்களின் தரத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்தி சேர்த்து விடுகின்றன, இவ்வாறு தரவுத் தளத்தில் சேர்க்கப்படும் விவரங்களை கீ வேர்ட் (key word) எனப்படும் முக்கிய தேடற் சொல் கொண்டு இணைய பயனர்களால் தேடக் கூடியதாக இருக்கும்.
தேடு பொறிக்குரிய முகப்புப் பக்கத்தில் (home page) நாம் தேடும் தகவலைச் சொல்ல உடனே தனது தரவுத்தளத்தை அடைந்து அதிலிருந்து முக்கியமான இணைய தளங்களின் பெயர்கள் முதலில் வருமாறும் எனையவற்றை அதற்கடுத்து வருமாறும் வரிசைப் படுத்தி முடிவுகளாகத் தரும். இணைய தளங்களின் உள்ளடக்கம் என்ன, என்பதனைப் பொருத்து வரிசைப்படுத்தல் வேறுபடும்.
சில நிறுவனகங்கள் சேர்ச் என்ஜின் சேவை தரும் நிறுவனகங்களுக்குக் கட்டணம் செலுத்தி தமது நிறுவன இணைய தளத்தின் பெயர் தேடல் முடிவுகளில் ஆரம்பத்தில் வருமாறு செய்திருக்கும். இவை Sponsored Links எனப்படும். இவைதான் உங்கள் தேடலுக்குப் பொருத்தனான முடிவு என நீங்கள் நினைக்கக் கூடாது.
இந்த தர வரிசைப்படுத்தல் எல்லா சேர்ச் என்ஜினிலும் ஒரே மாதிரியிருக்காது. இவை ஒவ்வொரு சேர்ச் என்ஜினும் கடை பிடிக்கும் வரிசைப் படுத்தல் முறைக்கமைய மாறுபடும். இதனால் தான் நாம் ஒரே தேடற் சொல்லைக் கொண்டு வெவ்வேறு சேர்ச் என்ஜினில் தேடலில் ஈடுபடும் போது எமக்கு வேவ்வேறு முடிவுகளைத் தருகிறது.
சேர்ச் என்ஜின் முடிவுகளைத் தரும் போது இணைய தளங்களில் என்னென்ன தகவல்கள் உள்ளன என்பதையும் சுருக்கமாகக் காட்டுவதோடு தேடல் முடிவுகள் அதிகமிருப்பின் அவற்றின் பக்க இலக்கங்களையும் கீழே பட்டியலிடும்.
இணைய தேடலுக்கு உதவி செய்ய ஏராளமான சேர்ச் என்ஜின்கள் ஏராளம் இருந்தாலும் அவற்றில் Google, Yahoo , Windows Live Search. Ask , AOL, Altavista, Lycos, Hotbot, என்பன பிரபல்யமான தேடு பொறிகளாகும்.
சேர்ச் என்ஜினி உள்ள தேடுவதற்குரிய கட்டத்தில் நீங்கள் விரும்பிய எதனையும் டைப் செய்ய முடியும். எந்த சொற்களையும் பயன்படுத்தலாம். சொற்கள் மட்டுமன்றி திகதி, இலக்கம் என எதையும் டைப் செய்யலாம். ஏன் கூட்டல் கழித்தல் போன்று எளிய கணித செயற்பாடுகளையும் டைப் செய்து விடை காணலாம். உங்கள் பிரச்சினைகள் மற்றும் வினாக்களுக்கும் கூட டைப் செய்து அவற்றிற்குத் தீர்வு காண முடியும்.
உதாரணமக உங்கள் கணினி பழுதடைந்திருந்தால் my computer has stopped working என டைப் செய்து அதற்கான பொதுவான முடிவுகளைப் பெறலாம். அத்தோடு உங்கள் கணினியைத் தயாரித்த கம்பனியின் பெயரையும் சேர்த்துக் கொடுப்போமானால் அதாவது my ibm computer has stopped working எனக் கொடுப்போமானால் இன்னும் சிறப்பாக கிட்டிய முடிவதோடு இந்த முடிவுக:ளிலிருந்து உங்கள் பிரச்சினைக்கான தீர்வையும் பெறலாம்.
சேர்ச் என்ஜின்கள் சில பொதுவான வார்த்தைக¨ளைப் புறக்கணிக்கும். உதாரணமாக தேடலில் ஈடுபடும் போது where is , what is போன்ற சொற்களைத் தவிர்க்கலாம். where is the eiffel tower என்பதன் முடிவுகளும் eiffel tower என்பதன் முடிவுகளும் அனேகமாக ஒரே மாதிரியாகவே இருக்கும். அத்துடன் ஆங்கிலத்தில் தேடும்போது capital / simple வேறுபாடும் (case sensitive) பார்ப்பதில்லை.
சில சேர்ச் என்ஜின்கள் உங்கள் தேடலை இலகுவாக்க சேர்ச் பொக்ஸின் பக்கத்திலேயே சில விருப்புக்களைக் காட்டும். அதாவது படங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட வகைப் பைல்களையே தேட வேண்டுமானால் Images எனும் லிங்கை சேர்ச் என்ஜின் முகப்புப் பக்கத்தில் வைத்திருக்கும். இதன் மீது க்ளிக் செய்து சேர்ச் பொக்ஸில் உங்கள் தேடற் சொல்லை டைப் செய்ய படங்களை மட்டுமே தேடிப் பட்டியலிடும்.
சில சேர்ச் என்ஜின்கள் Options அல்லது Preferences போன்ற இணைப்புகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம் உங்கள் தேடலை குறிப்பிட்ட சில விதி முறைகளுக்கமையத் தேட முடிவதுடன் நீங்கள் எதிர் பார்க்கும் தகவலைப் இலகுவாகப் பெறக் கூடியதாய் இருக்கும். அதேபோல் தேடு பொறிகள் (Safe Search) பாதுகாப்பான தேடல் எனும் வசதியைக் கொண்டிருக்கும். இதன் மூலம் பார்க்கத் தகாத படங்கள், மற்றும் செய்திகளை வடிகட்டவோ அல்லது அனுமதிக்கவோ முடியும்.
சேர்ச் என்ஜின்களில் AND, OR, NOT போன்ற Boolean Operator கொண்டு தேடுவதன் மூலம் உங்கள் தேடலை மேலும் இலகுவாக்Bக் கொள்ளலாம்.
பல சேர்ச் என்ஜின் நிறுவனங்கள் தற்போது நீங்கள் விரும்பிய மொழியில் தேடுவதற்குரிய வசதியைத் தருகின்றன. தமிழ் மொழியிலும் கூட தேடலை மேற்கொள்ளலாம். தமிழில் தேட யுனிகோட் முறையிலமைந்த எழுத்துருவையே (font) பயன்படுத்த வேண்டும்.
-அனூப்-