Can Whatsapp messages be read by third parties?


Can Whatsapp messages be read by a third party? ”வாட்சப் செயலி மூலம் அனுப்பப்படும் செய்திகள் அனைத்தும் முனைக்கு முனை  (end to end) மறைகுறியாக்கம் (
encrypt) செய்யப்படுகின்றன. மறைக் குறியாக்கம் செய்யப்படுவதன் மூலம் வாட்சப்பில்  ஒரு செய்தியை அனுப்புபவரும் அதனைக் கிடைக்கப் பெறுபவரும் மட்டுமே அதன்  உள்ளடக்கத்தைப் படிக்க முடியும்” என்றும் வாட்சப் நிறுவனம்  உறுதியாகச் சொல்கிறது.  


போதைப்பொருள் பயன்பாடு பற்றி  பாலிவுட் நடிகர்களின் வாட்சப் அரட்டைகள் வேண்டுமென்றே கசிய விட்டிருப்பதன்  காரணமாக வாட்சப் செய்தி மேடை பற்றியும்  தங்கள் உரையாடல்களின் தனியுரிமை (privacy) குறித்தும் வாட்சப் பயனர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ள நேரத்தில் வாட்சப் நிறுவனத்தின் இந்தியக் கிளையிலிருந்து  இந்த அறிக்கை வந்துள்ளது.

"வாட்சப் உங்கள் செய்திகளை முனைக்கு முனை (end to end) மறைக்   குறியாக்கத்துடன் பாதுகாக்கிறது.  இதன்மூலம் அச் செய்திகளை நீங்களும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரும் மட்டுமே படிக்க முடியும்.

தொலைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தியே  பயனர்கள் வாட்சப்பில் பதிவு செய்கிறார்கள். வாட்சப் நிறுவனம் நினைத்தால் கூட  பயனர்களின்  செய்தி உள்ளடக்கத்தை அணுக முடியாது என்றும் மேலும் குறிப்பிடுகிறது அச் செய்திக்  குறிப்பு. அந்த வியத்தை வாட்சப் செயலியும்  கூட அடிக்கடி காண்பிப்பது  உங்கள் பார்வையில் பட்டிருக்க முடியும்.


சாதன சேமிப்பிற்காக இயக்க முறைமை உருவாக்குபவர்களால் வழங்கப்படும் வழிகாட்டல்களை (guidance) வாட்சப் பின்பற்றுகிறது.

இருந்தாலும்  தமது தொலைபேசிக் கருவிகளில்  சேமிக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மூன்றாம் தரப்பினர் அணுகுவதைத்  தடுக்க வலுவான கடவுச்சொற்கள் (strong password) அல்லது பயோமெட்ரிக் ஐடிகள் (biometric ID) போன்ற இயக்க முறைமைகளால் வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது பயனர்களின்  பொறுப்பாகும்.  

இன்னொருவரின் கையடக்கத் தொலைபேசியை அவரின் அனுமதியுடனோ அனுமதியில்லாமலோ கையிலெடுத்துப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வாட்சப் செய்திகளை மூன்றாம் தரப்பினரால் படிக்க முடியும் என்பது இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


ஒரு வேளை உங்கள் வாட்சப் செய்தி மூன்றாம் நபரிடம் சென்றிருக்கிறது எனநீங்கள் கருதினால் அது கீழே குறிப்பிடும் வழிகளில் சென்றிருக்கலாம்.

அந்த நபரின் இணைய உலாவியில் நீங்கள் எப்போதாவது உங்கள் வாட்சப் வெப்பில் (whatsapp web) உள்நுழைந்து, கணினியிலிருந்து முறையாக வெளியேற மறந்துவிட்டால் (logout) , நீங்கள் இணையத்துடன் இணைக்கும்போதெல்லாம் அவர் உங்கள் எல்லா அரட்டைகளையும் படிக்க முடியும்

அவர் உங்கள் மொபைலில் உளவு மென்பொருட்களைப் (spyware) பயன்படுத்தினால், அவர் உங்கள் அழைப்புகளைக் கூட கேட்க முடியும்

உங்கள் மொபைலில் whatsapp/database/db கோப்புறையில் அமைந்துள்ள (database file) தரவுத்தள கோப்பு ஏதோவொரு வகையில் அவர் கைக்குச் சென்றிருந்தால், அதை வேறு மொபைலுக்கு அனுப்பி மீட்டமைப்பதன் மூலம் அதை எளிதாக டிக்ரிப்ட் (decrypt) செய்யலாம். 

WhatsApp business