Facebook Avatar உருவாக்குவது எப்படி?

 



Facebook Avatar |கடந்த சில தினங்களாக பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் தங்கள்  சுயவிவரப் படங்களை (ப்ரொபைல் பிக்‌சர்ஸ்)  காட்டூன்  படங்களாக மாற்றி  பேஸ்புக்கில்  பகிர்ந்து வருவது ட்ரெண்டாக மாறியிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.

அவதார் Avatar  எனும் இந்தப் புதிய அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் ஐரோப்பா நாடுகளில் அறிமுகப்படுத்தியிருந்து. தற்போது இந்த அம்சத்தை அனைத்து நாடுகளிலும் பயன் படுத்தக் கூடியதாய் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அப்டேட் செய்திருக்கிறது.


அதனால் இந்தப் புதிய பேஸ்புக் அவதார் அம்சத்தை இலங்கை, இந்தியா நாடுகளில் உள்ள பேஸ்புக் பயனர்களும்  இப்போது தங்கள் கார்ட்டூன் வடிவிலான படங்களை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

பேஸ்புக் சுயவிவரப் படம் மட்டுமல்லாது பதிவுகளில் பின்னூட்டம் இடும் போதும்  மற்றும் மெசஞ்சர் சேட் டிலும் கூட  இதனைப்  பயன்படுத்தலாம். மற்றும் ஸ்டிக்கர் பொதிகளையும் உருவாக்க முடியு ம்.

இது தவிர பயனர்கள் இந்த அவதார் படத்தை ஸ்னாப்சாட், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளிலும்  பயன் படுத்தலாம்.

இந்த அவதார் படத்தை பேஸ்புக் மொபைல் செயலியில் மட்டுமே உருவாக்க முடியும். டெஸ்க்டொப் கணினி பிரவுசரில் உருவாக்க முடியாது.

அவதார் படத்தை நீங்களும் உருவாக்க விரும்பினால் முதலில் உங்கள் மொபைலில் பேஸ்புக் செயலியைத் திறந்து search ஐக்கானில் தட்டுங்கள். அங்கு avatar என டைப் செய்து தேடுங்கள். வரும் தேடல் முடிவுகளில் Facebook Avatars என்பதில் தட்டி வரும் விசர்டைப் பின் தொடருங்கள்.

கீழுள்ள இணைப்பில் தட்டியும் அந்த விஷர்டைப் (wizard) பெறலாம்.

ஒரு அவதாரை உருவாக்குவதில் பில்டிங் ப்ளாக்ஸ் (building blocks) போல் பல கட்டங்கள் இருப்பதால் இதற்கு சில நிமிடங்கள் நீங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும். அவதார் படத்தை உருவாக்கிய பின்னர் உங்கள் பேஸ்புக் ஊட்டத்தில் அதனைப் பகிரவோ அல்லது அதை உங்கள் சுயவிவரப் படமாக அமைக்கவோ அம்புக்குறி ஐகானைத் தட்டுங்கள். அவதார் ஸ்டிக்கர்கள் அனைத்தையும் காண ஸ்டிக்கர் ஐகானைத் தட்டுங்கள்.

http://m.facebook.com/avatars_create