What is Dropshipping?
What Is Dropshipping டிராப்ஷிப்பிங் என்பது ஓர் இணையவழி வணிக மாதிரியாகும் (online business model). இங்கு நீங்கள் பொருட்களைக் (products) கையிருப்பில் (stock) வைத்திருக்காமலே, உங்கள் பொருட்களை வைத்திருக்க ஒரு கட்டடமோ, கடையோ, களஞ்சிய அறையோ எதுவும் இல்லாமலே, பொருட்களை பொதி செய்தல் (packaging) அனுப்புதல் (shipping) போன்ற வேலைகள் கூட இல்லாமலே, ஏன் துணைக்கு வேலையாட்களே இல்லாமலே ஆன்லைனில் கடை விரித்து பொருட்களை விற்பனை செய்யும் ஓர் ஆன்லைன் வணிகமே டிராப்ஷிப்பிங்.
டிராப்ஷிப்பிங் வணிகத்தில் மூன்று
முக்கியமான காரணிகள் உள்ளன:
சப்ளையர்,
உங்கள் ஸ்டோர் மற்றும் வாடிக்கையாளர்.
சப்ளையர் supplier- முதலில், நீங்கள் ஒரு (சப்ளையர்) மொத்த விற்பனையாளரைக் கண்டுபிடிக்க
வேண்டும். உங்கள் பொருட்களை
வைத்திருப்பதற்கும், ஆர்டரை
நிறைவேற்றுவதற்கும் சப்ளையர் பொறுப்பாவார். சப்ளையர்களுக்கு உதாரணமாக மிகவும் பிரபலமான
ஆன்லைன் ஷாப்பிங் தளமான அலி எக்ஸ்பிரஸைக் (aliexspress.com)
குறிப்பிடலாம். இது தவிர இன்னும்
ஏராளமான சப்ளையர்களும் உள்ளனர்.
உங்கள் ஸ்டோர் (your store) - இது ஒரு
வாடிக்கையாளர் தங்கள் ஆர்டரை வைக்கும் உண்மையான ஈ-காமர்ஸ் ஸ்டோர் வெப்சைட். இத்தளத்தில்
விற்பனைப் பொருட்களின் படங்கள் (images) மற்றும்
அவற்றின் விவரங்கள் (descriptions) உள்ளிட்ட
பொருட்களின் பட்டியலை (catalog) நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
வாடிக்கையாளர் (customer)- ஒரு வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்குவதற்காக ஆர்டர் செய்யும்போது , உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும். அதை நீங்கள் உங்கள் சப்ளையருக்கு அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர் உங்களுக்கு பணம் செலுத்திய பின்னரே நீங்கள் உங்கள் சப்ளையருக்கு பணம் செலுத்த வேண்டும்.
ஒரு டிராப்ஷிப் ஆன்லைன் ஸ்டோரைத் ஆரம்பிக்க பெரிய அளவிலான முதலீடு அவசியமில்லை. ஒரு சில ஆயிரம் ரூபாய்களிலேயே ஆரம்பித்து விடலாம். ஏனெனில் நீங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பொருட்களை வாங்கி வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.
உங்களுக்கு தேவையானது ஒரு இணைய தளம் (website) மற்றும்
ஒரு கிரெடிட் கார்டு அட்டை மட்டுமே. நீங்கள் உடனடியாக ஆன்லைனில்
பொருட்களை விறபனை செய்ய ஆரம்பிக்கலாம்.
மொத்த விற்பனையாளரிடமிருந்து
வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பொருட்களை விற்க இது உதவுகிறது. மேலும்
வாடிக்கையாளர் நீங்கள் ஒரு இடைத் தரகர் என்பதை அறிய மாட்டார். உங்களை ஒரு நேரடி
விறபனையாளராகவே எண்ணுவார்.
ஒரு சில்லறை விற்பனையாளராக, நீங்கள் செய்ய
வேண்டியது ஆன்லைன் பொருட்கள் பட்டியலை (product
catalog) உங்கள் இ-காமர்ஸ் (e-commerce) இணைய
தளத்தில் வைத்திருப்பது மட்டுமே. நீங்கள் எந்த பொருட்களையும் கைவசம் வைத்திருக்க
வேண்டியதில்லை. மேலும் பலவகையான பொருட்களை (products)
நீங்கள் விற்பனை செய்ய முடியும்.
வாடிக்கையாளர் உங்கள்
ஸ்டோரிற்கு வந்து 100 டாலரிற்கு (நீங்கள் நிர்ணயித்த விலை) க்கு ஒரு ஆர்டரை முன்
வைக்கிறார்.
நீங்கள் சப்ளையருக்கு 80 டாலர்
(whole sale price - மொத்த விலை) செலுத்துகிறீர்கள்.
சப்ளையர் வாடிக்கையாளருக்கு பொருளை
அனுப்புகிறார்.
நீங்கள் 20 டாலரை
லாபத் தொகையாகப் பெறுகிறீர்கள்.
இவ்வாறுதான் சட்டபூர்வமான (legal) டிராப்ஷிப்பிங்
நடைபெறுகிறது.
அப்படியானால் சட்டபூர்வமற்ற (illegal) டிராப்ஷிப்பிங் வணிகமும் நடை
பெறுகிறதா?
ஆம்
மொத்த விற்பனையாளரின் அனுமதி பெற்று நடை
பெறும் டிராப்ஷிப்பிங் வணிகம் சட்ட பூர்வமானது எனவும் அவர்களின் முறையான அனுமதி
பெறாமல் நடை பெறுபவை சட்ட பூர்வமற்ற டிராப்ஷிப்பிங் எனவும் வேறுபடுத்தப் படுகிறது.
எனினும் இரண்டாவது வகையினரே இத் தொழிலில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.
இது எவ்வாறு நடை பெறுகிறது?
இ-பே (E-Bay),
அலி எக்ஸ்பிரஸ் (Ali Express), Amazon எமசோன்
போன்ற மிகப் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை நீங்கள் அறிவீர்கள்.
இங்கு பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைன் வழியே வாங்கலாம், விற்கலாம். அதுவும்
அலி எக்ஸ்பிரஸ் எனும் சீன தளத்தில் பல பொருட்களை இ-பேயை விடவும் மிக மலிவாக
வாங்கலாம்.
சட்ட பூர்வமற்ற முறையில் டிராப்ஷிப்பிங்
செய்பவர் அலி எக்ஸ்பிரஸ் தளத்தில் ஒரு பொருள் மலிவாகக் கிடைக்கிறது
என்பதை அறிந்து அந்தப் பொருள் பற்றிய அனைத்து விவரங்களையும் அலி எக்ஸ்பிரஸ்
தளத்தில் இருந்தே பிரதி செய்து (copy-paste)
(கொப்பி பேஸ்ட் பண்ணாமலேயே அலி
எக்ஸ்பிரஸ் தளத்திலிருந்து நேரடியாக இ-பே தளத்தில் பொருட்களின் பட்டியலை மிக
இலகுவாக சேர்க்கும் தனியான கருவிகளும் உண்டு) இ-பே தளத்தில் ஒரு விற்பனையாளர்
கணக்கின் (seller account) மூலம்
இன்னும் கூடுதலான விலை நிர்ணயித்து
விற்பனைக்கு விடுவார். சில வேளை இவர் சொந்தமாக ஓர் இ-காமர்ஸ் ஸ்டோர் கூட வைத்திருக்க
மாட்டார்.
உதாரணமாக அலி எக்ஸ்பிரஸ் தளதில் 5 டாலருக்குக்
கிடைக்கும் ஒரு பொருளை இ-பே தளத்தில் 8
டாலருக்கோ 10 டாலருக்கோ
விற்பனைக்கிருப்பதாக பட்டியலிடுவார்.
இத்தனைக்கும் அவர் அந்தப் பொருளை
கண்களால் பார்த்திருக்கவும் மாட்டார். கைகளால் தொட்டிருக்கவும் மாட்டார்.
இ-பேயில் இவரின் விளம்பரத்தைப் பார்க்கும் அப்பாவி வாடிக்கையாளர் ஒருவர் அலி- எக்ஸ்பிரஸ் தளத்தில் அதனை விடக் குறைந்த விலையில் கிடைப்பதை அறியாமலேயே, அதன் உண்மையான பெறுமதி என்ன என்பதை வேறெங்கும் தேடித் தெரிந்து கொள்ளாமலேயே ஐந்து டாலர் மதிப்புடைய பொருளிற்கு 10 டாலர் செலுத்தி வாங்குவார். அதற்கான ஆர்டரை முன் வைப்பார். (இது ஒரு வகையான பகற் கொள்ளைதான், சுரண்டல்தான்)
பொருளிற்கான ஆர்டர் கிடைக்கப் பெறும்
சில்லறை வணிகரான அந்த டிராப்ஷிப்பிங் வணிகர்
அந்தப் பொருளை அலி- எக்ஸ்பிரஸ்
தளத்திற்குச் சென்று சில்லறை விலையிலேயே கொள்வனவு செய்வார். எனினும் ஷிப்பிங்
முகவரியாக (shipping address) தனது முகவரிக்குப் பதிலாக அந்த வாடிக்கையாளரின் முகவரியை அலி
எக்ஸ்பிரஸ் தளத்தில் குறிப்பிடுவார். இவருக்கும் அந்த அலி எக்ஸ்பிரஸ் சில்லரை
வியாபாரிக்கும் இடையில் எந்த உறவும் இல்லை
சில்லறை வியாபாரியான அலி
எக்ஸ்பிரஸ் தளத்தில் பொருளை விளம்பரப் படுத்தியவர் உங்கள் ஆர்டர் கிடைக்கப்
பெற்றதும் அப் பொருளை நீங்கள் வழங்கிய உங்கள் வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பி
வைப்பார்.
இவ்வாறு ஒரு பொருளை விற்பனை செய்வதன் மூலம் மிக சுலபமாக 5 டாலர் உழைக்க முடிகிறதென்றால் அதே போன்ற நூறு பொருட்களை சில வேளை ஒரே நாளில் விற்பனை செய்யும் போது எவ்வளவு இலாபம் பெறலாம் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
குறிப்பாக இந்த டிராப்ஷிப்பிங் வணிகம்
அமெரிக்கா, கணடா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற செல்வந்த
நாடுகளிலுள்ள மக்களை (வாடிக்கையாளர்களை)
இலக்காகக் கொண்டே நடாத்தப்படுகிறது.
அதுவும் பெண்கள் குழந்தைகள் சார்ந்த பொருட்களே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
பொருட்களின் விலை பற்றி எந்த கேள்வியுமில்லாமல் கவலையுமில்லாமல் பொருட்களை வாங்கும்
அந்நாட்டு மக்களின் ஷாப்பிங் செய்யும்
பழக்கம்தான் (shopping habit) டிராப்ஷிப்பிங்
வணிகம் சிறப்பாக நடை பெறுவதற்கு ஒரு காரணம் எனலாம்.
இ-பே (E-Bay
) நிறுவனத்திற்கு இவர்களின் இந்த வியாபார
உத்தி (?) தெரியாமலா இருக்கிறது?
நிச்சயமாக இ-பேயும் அறிந்துதான்
வைத்திருக்கிறது. மேலும் இது போன்ற
டிராப்ஷிப்பிங் வணிகர்களை இ-பே
ஆதரிப்பதில்லை. மொத்த வியாபரிகளின் முறையான அனுமதி பெற்று ட்ரொப் ஷிப்பிங்
வணிகத்தில் ஈடுபடுவதையே இ-பே வலியுறுத்துகிறது. எனவே இது போன்ற
ட்ரொப்ஷிப்பிங் வணிகர்களை கண்டறியும் போது இ-பே அவர்களின் விற்பனையாளர் கணக்கை
முடக்கி விடுகிறது.
அதனால் டிராப்ஷிப்பிங் வணிகத்தில்
ஈடுபடுவோர் இ-பே தளத்தை மட்டும் நம்பாமல் Etsy
போன்ற பல்வேறு ஷாப்பிங் தளங்களையும்
பயன் படுத்துவதுண்டு. மேலும் அனேகமாக பலரும் தங்கள் சொந்த இ-காமர்ஸ் தளமொன்றையும்
வைத்திருப்பார்கள்.
சட்டபூர்வமான டிராப்ஷிப்பிங் மூலம்
நீங்கள் விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பு சந்தை நிலையை (market research) ஆய்வு
செய்வது மிகவும் முக்கியமானது. தற்போதைய ஆன்லைன் சந்தையில் நீங்கள்
போட்டியிடக்கூடிய, விற்பனை
செய்யக்கூடிய தயாரிப்புகளை முதலில்
கண்டறிய வேண்டும்.
இ-பே தளத்தில் பொருட்களைப்
பட்டியல்டுவதன் மூலமாகவோ, உங்கள் சொந்த இ-காமர்ஸ் தளத்தை உருவாக்குவதன் மூலமோ மட்டும்
பொருட்களை விற்பனை செய்து விட முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பொருட்களை விளம்பரப் படுத்தவும்
(marketing /promote / advertise) ) வேண்டும்.
அதற்காக பேஸ்புக், இன்ஸ்டகிரேம் போன்ற சமூக வளைதளங்களைப் பயன் படுத்த வேண்டும்.
இலங்கை,
இந்தியா போன்ற நாடுகளிலிருந்து டிராப்ஷிப்பிங்
செய்பவர்கள் தங்கள் உண்மையான
இருப்பிடத்தை மறைத்து பேஸ்புக் பேஜ்
உருவாக்குவதற்காக அமெரிக்க, கண்டா, ஐரோப்பிய நாடுகளில்
வ்சிக்கும் தமது நண்பர்கள், உறவினர்களின்
தொலைபேசி இலக்கத்தைப் பயன் படுத்தி உருவாக்கிக் கொள்வதுமுண்டு.
தங்கள் இ-காமர்ஸ் தளத்திற்கு
வாடிக்கையாளர்களை வர வைப்பதற்காக
பேஸ்புக் விளம்பரம் (facebook ads) , கூகுல்
விளம்பரம் (Google ads) போன்றவறைப் பயன் படுத்தும் போதுகூட செல்வந்த நாடுகளை
மாத்திரம் இலக்கு வைத்தே விளம்பரப் படுத்துவார்கள்.
தற்போது இலங்கையில் கூட இந்த
ட்ரொப்ஷிப்பிங் வணிகத்தில்
ஏராளமானோர் குறிப்பாக இளைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஒரு பொருளை அலி எக்ஸ்பிரஸில் 20 டாலருக்கு வாங்கி அதனை இ-பேயில் 80 டாலருக்கு விற்பனை
செய்து பெருமை அடித்துக் கொள்ளும் இளைஞர்களும் உண்டு. மிகச் சிறிய முதலீட்டிலேயே
வீட்டிலிருந்தே நடாத்தக் கூடிய
இந்த ஆன்லைன் வணிகம் இளைஞர்களை வெகுவாகக்
கவர்ந்திருக்கிறது.
இலங்கையைப் பொருத்தவரை ட்ரொப்ஷிப்பிங் வணிகத்தில் இருக்கும்
ஒரே ஒரு பிரதான முட்டுக் கட்டை சட்ட பூர்வமாக பணப் பரிமாற்றம் செய்வதற்கான ஒரு வழி
முறை இல்லாதிருப்பதே. ஏனெனில்
உலகின் மிகப் பிரபலமான ஆன்லைன் பண மாற்று
சேவையான பே-பேல் நிறுவனத்திற்கு (Pay-Pal
Payment Gateway) இலங்கையில் இன்னும் அனுமதி வழங்கப்
படவில்லை. இருந்தாலும் அதற்கும் ஒரு மாற்று வழி கண்டு பிடித்து வைத்தே
இருக்கிறார்கள். அது என்னவென்று நான் இங்கு சொல்ல விரும்பவில்லை.
இதுவரை டிராப்ஷிப்பிங் பற்றி
அறிந்திராதவர்கள் இன்றே இந்த வணிகத்தில் ஈடு பட ஆரம்பிக்கலாம். மிகக் குறுகிய
காலத்திலேயே கோடிகளில் புரளலாம். கொடி கட்டிப் பறக்கலாம். நீங்களும் ஒரு (online entrepreneur) ஓன்லைன்
ஒன்ட்ராப்ரனராக (தொழில் முனைவோராக) மாறலாம்.
டிராப்ஷிப்பிங் வணிகம் மற்றும்
இ-காமர்ஸ் இணைய தளங்களை உருவாக்க என்னென்ன தேவை?
இ-காமர்ஸ் தளங்கள் உருவாக்குவதில் Shopify தளம்
மற்றும் வர்ட்ப்ரெஸ் மென்பொருள் முன்னிலை வகிக்கின்றன.
எனினும் Shopify தளத்தினை
இலவசமாகப் பயன் படுத்த முடியாது. மாதாந்தம் 29$
இல் இருந்து கட்டணம் அற்விடப் படுகிறது.
வர்ட்ப்ரெஸ் Wordpress மென்பொருளுடன் WooCommerce எனும் மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் இலவச ப்லக் இன் (plug in) கருவியும்
பயன் படுத்தப்படுகிறது.
Wordpress பயன் படுத்துவதானால் ஒரு இ-காமர்ஸ் தீம் அவசியம்
உதாரணம் : flatsome
theme (கட்டணம் உண்டு)
Domain Name : godaddy,
namecheap,
porkbun (கட்டணம் உண்டு .com
வருடத்திற்கு சுமார் 10$ )
SSL certificate : வருடத்திற்கு சுமார் 10$
Web Hosting provider : hostinger, Bluehost Hostgator (கட்டணம்
உண்டு. வருடத்திற்கு சுமார் 10$ / 1 GB
Space)
Elementor Page Builder : Basic பதிப்பு
இலவசம் / Pro பதிப்பிற்கு கட்டணம் அறவிடப்படும்
eBay seller account : eBay
Ali Express Account : Ali Express
Payment Gateway : Pay-Pal Business account, stripe, PayHere (இலங்கையருக்கு
சொந்தமானது. 2Checkout
ShopMaster tool : Shopmaster (800 பொருட்கள் வரை இலவசம்.
அதற்கு மேல் கட்டணம் உண்டு)
AliSave chrome browser extension tool :
Facebook Account / Facebook Business page : Facebook
Instagram account
மேற் சொன்ன விடயங்கள் எவற்றிலும்
உங்களுக்குப் பரிச்சயம் இல்லாவிட்டால் நீங்கள் என்னையும் நேரடியாகத் தொடர்பு
கொள்ளலாம். சிறந்த வழி காட்டல் வழங்கப்படும். ஆனால் அதற்கும் கட்டணம் உண்டு. anoof.in
இறுதியாக,
நீங்கள் டிராப்ஷிப்பிங் வணிகத்தை
இன்றும் ஆரம்பிக்கலாம். இன்னும் ஒரு வருட காலம் சென்ற பிறகும் கூட ஆரம்பிக்கலாம். ஏனெனில் மக்கள்
இன்னும் பொருட்கள் வாங்குவதை நிறுத்தவில்லை. அவர்களின் தேவை இன்னும்
முடியவுமில்லை. அது என்றும் முடிவுறாத செயற்பாடு. உங்களிடம் பொருட்களை
வாங்கவும் வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
Post Comment