WhatsApp Vs Telegram: எது சிறந்தது?
WhatsApp Vs Telegram உடனடி செய்திச் சேவை தளங்களில் (instant messaging platforms) பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்சப் மிகப் பிரபலமான செயலி. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் வாட்சப் மெசஞ்சரின் பயனர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அதன் பின்னர் அறிமுகமான டெலிகிரேம் செயலியும் வாட்சப்பிற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பது போல் வாட்சப்பிற்கு போட்டியாக பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
வாட்சப்-டெலிக்ரேம் இவையிரண்டில் எது சிறந்தது
என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னர் இரண்டையும் பற்றி சிறிது அலசுவோம்.
யாஹூவின் முன்னாள் ஊழியர்களான Brian Acton மற்றும் Jan Koum, ஆகியோரால் 2009 ஆம் ஆண்டில் வாட்சப் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் பேஸ்புக்கில் வேலைக்கு
விண்ணப்பித்தார்கள். எனினும்
இருவரும் பேஸ்புக்கால் நிராகரிக்கப்பட்டனர்.
பின்நாட்களில் அவர்களால் உருவாக்கப்டட வாட்சப் உலகளவில் பிரபல்யமானது. வாட்சப்பின்
மாபெரும் வளர்ச்சியைக் கண்ட பேஸ்புக் அதனை பெரும் தொகைப் பணம் கொடுத்து 2014 ஆம் ஆண்டில்தன் கையகப்படுத்தியது வரலாறு.
ரஷ்ய சமூக வலையமைப்பான VK வி.கே.யை
நிறுவிய சகோதரர்கள் Nikolai / Pavel Durov நிகோலாய் மற்றும் பாவெல் துரோவ் ஆகியோரால் இந்த டெலிக்ரேம் சேவை 2013 இல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் Mail.ru Group குழுமத்தால் வி.கே.யை கையகப்படுத்தப்பட்ட பின்னர் அந்
நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. தற்போது டெலிக்ரேம் டுபாய் நாட்டைத் தளமாகக் கொண்டு
இயங்கி வருகிறது.
வாட்ஸ்அப்பை விட டெலிகிராம் சிறந்தது என்பதற்கான
காரணங்கள்:
1. டெலிக்ராம் பயனர்களின் மொபைல் இலக்கத்தை வெளிப்படுத்தாமல் அவர்களின் தனியுரிமையை (privacy) பாதுகாக்கிறது. மொபைல் இலக்கத்திற்குப் பதிலாக ஒரு பயனர்பெயரைப் பயன் படுத்தி பிறருடன் அரட்டையில் ஈடுபடலாம். பிறரின் தொடர்பு எண் கூட தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2. டெலிகிராமில் ரகசிய அரட்டை (Secret Chats) எனும் வசதி உள்ளது. இந்த அரட்டையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயங்கள் நிறுவனத்தின் சேர்வரில் சேமிக்கப்படமாட்டாது என்பதுடன் எந்த தடயத்தையும் விட்டு வைக்காது. மேலும், ஒரு ரகசிய அரட்டையில் பங்கேற்பாளர்கள் யாராவது அரட்டையை ஸ்கிரீன் ஷாட் எடுத்தாலும் அவர்கள் இருவருக்கும் இது குறித்து அறிவிக்கும். மேலும் ரகசிய அரட்டையை இன்னொருவருக்கு ஃபார்வர்ட் பண்ணவும் முடியாது.
3.டெலிக்ரேம் அரட்டையில் (chat) ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு செய்திகள் தானாக அழியுமாறு (self-destructing) டைமரை அமைக்க பயனர்களை அனுமதிக்கிறது. டைமரை 1 வினாடி முதல் 1 வாரம் வரை அமைக்கலாம்.
4. வாட்சப் மூலம் அனுப்ப அனுமதிக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் செய்தி கோப்புகளின் அதிகபட்ச அளவு 16 எம்பி ஆகும். எனினும் டெலிகிராமில், எந்த கோப்பு வகையையும் 2 ஜிபி வரை அனுப்பலாம்.
5. டெலிகிராம் செயலியில் போட்ஸ் (bots) எனப்படும் சிறு செய் நிரல்களின் பயன் பாடு தனித்துவமானது எனலாம். போட்ஸ் என்பது AI (Artificial Intelligence) செயற்கை நுண்னறிவு மற்றும் இயந்திர கற்றலை (machine learning) அடிப்படையாகக் கொண்ட ஒரு செய்நிரல்களாகும். இதன் மூலம் பல பணிகளை திறம்பட செய்ய முடியும்.
உதாரணமாக, ஒரு Image bot மூலம் ஒரு படத்தின் பெயரிலிருந்து படங்களை பெறலாம்.
அதே போன்று இமேஜ் போட், ஜிஃப் போட் (gif bot) மற்றும் ஸ்டிக்கர் போட் (sticker
bot) போன்ற பல வகையான போட்கள்
டெலிகிராம் செயலியில் பயன்படுத்தப்படுகின்றன.
#Bots பற்றி மேலும் தெரிந்து கொள்ள#
6. பயனர்களின் படங்கள் (images) , உரை செய்திகள் (text messages), மீடியா கோப்புகள் (media files) மற்றும் ஆவணங்களை டெலிகிராமின் சொந்த கிளவுட்
ஸ்டோரேஜ் (cloud storage) இல் சேமிக்க அனுமதிக்கிறது.
டெலிகிராம் வழங்கும் எல்லையற்ற (unlimited)
கிளவுட் ஸ்டோரேஜ் காரணமாக
உங்கள் கோப்புக்களை செய்திகளை எக்காரணத்திற்காகவும் இழக்க நேரிடாது. மேலும் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த கோப்பையும் பதிவிறக்கம்
செய்யலாம்.
டெலிகிரேமில் உங்கள் கோப்புக்களை காப்புப்பிரதி (backup) எடுப்பது பற்றியோ அதனை மீட்டமைப்பைப் (restore) பற்றியோ கவலையே வேண்டாம்.
7. காப்புப்பிரதியைப் (backup) பொறுத்தவரை, டெலிகிராம் அதன் சொந்த மறைகுறியாக்கப்பட்ட (encrypted)
கிளவுட் ஸ்டோரேஜில்
சேமிக்கிறது. அதே நேரத்தில் வாட்சப் ஆனது ஐ-க்ளவுட் அல்லது கூகிள் டிரைவில் காப்புப்பிரதியை
சேமிக்கிறது. இவை மறை குறியாக்கம்
(encryption) செய்யப்படுவதில்லை.
8.டெலிக்ரேம் குழுக்கள் (groups)
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்
செய்திகளைப் பகிர்வதற்கு அல்லது சிறிய குழுக்களில் ஒத்துழைப்பதற்கு ஏற்றவை.
குழுக்கள் மிகப் பெரிதாக வளர்ந்து 200,000 உறுப்பினர்களைக் கொண்ட சமூகங்களைக் கூட ஆதரிக்கலாம்.
எனினும் வாட்ஸசப் க்ரூப்பில் சேர்க்கக்கூடிய அதிகபட்ச பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை
256
9. வாட்சப்பில் ப்ரோட்காஸ்ட் எனும் வசதி இருப்பது போல்
டெலிக்ரேமில் சேனல் (Channel)
எனும் வசதி உள்ளது. இந்த சேனல்
அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. இந்த சேனல்கள்
எல்லையற்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்
மேலும் டெலிக்ரேம் பொதுவான சேனல் (Public channel) மற்றும் தனிப்பட்ட சேனல் (private
channel) என இரண்டு வகையான சேனல்களை
ஆதரிக்கிறது. பொதுவான சேனலில், சேனல்
பெயரைக் கொண்டு தேடி எவரும் அதில் இணையலாம். அதேசமயம் தனிப்பட்ட சேனல்களில்
இன்விடேஷன் லிங்க் வழியாக மட்டுமே இணைய முடியும்.
ஒரு டெலிகிராம் சேனலை உருவாக்குபவர் அதன் நிர்வாகியாக
செயல்படுவார். ஒரு சேனலில் யாரெல்லாம்
பதிவுகளை இடலாம் என்பதையும் யாரெல்லாம்
அவற்றைப் பார்வையிட முடியும் என்பதையும் நிர்வாகியால் கட்டுப்படுத்த முடியும்.
10. கம்பியூட்டரில் வாட்சப் வெப் (whatsapp web) பயன் படுத்த வேண்டுமானால் மொபைல் வாட்சப் செயலி
இயங்கு நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் வாட்சப்பில் இருக்கிறது. எனினும்
டெலிகிராம் சேவை அனைத்து தளங்களிலும் (மொபைல் செயலி, டெஸ்க்டாப் செயலி, வெப் செயலி) சுயாதீனமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
மேலும் டெலிக்ரேம் பயனர்கள் ஒரே நேரத்தில் பல
சாதனங்களில் உள்நுழையலாம் மற்றும் எல்லா சாதனங்களிலும் செய்திகளைப் பெறவும்
முடியும்.
11. டெலிகிராமின் மீடியா சுருக்கமானது (media
compression) பயனர்கள் படங்களையும்
வீடியோவையும் சுருக்க வேண்டுமா அல்லது சுருக்கப்படாமல் அனுப்ப வேண்டுமா என்று தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.
12. அனுப்பப்பட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதி
டெலிக்ராமில் உள்ளது. எனினும் வாட்சப்பில் அனுப்பிய செய்திகளை எடிட் செய்ய
முடியாது. அந்த செய்தியை மறுபடி புதிதாக அனுப்ப வேண்டும்.
டெலிகிராமை விட வாட்ஸ்அப் சிறந்தது என்பதற்கான
காரணங்கள்:
1. டெலிகிராமின் 200 மில்லியன் இயங்கு நிலையில் உள்ள பயனர்களுடன்
ஒப்பிடும்போது வாட்ஸ்அப் தற்போது 1.6 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இதன் பொருள் உங்கள்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் டெலிகிராமை விட வாட்ஸ்அப் பயன் படுத்திக்
கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
3. வாட்சப் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை
ஆதரிக்கிறது.டெலிகிராம் இது வரை விடியோ அழைப்பை ஆதரிப்பதில்லை என்று சொல்ல நினைக்கும்
போதே டெலிகிராமிலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீடியோ அழைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
4 .வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை உரியவருக்கு அனுப்பப்பட்டு விட்டது (Delivered)
என்பது பற்றி (Double
tick) குறியீடு மூலம்
அனுப்புபவருக்கு அறியத்தருகிறது. எனினும் இந்த டெலிவரி ஸ்டேட்டஸ் டெலிக்ரேமில்
இல்லை. காரணம் டெலிக்ரேம் பயனர்கள் ஒரே
நேரத்தில் எந்தவொரு சாதனத்திலும் ஒரே கணக்கைப் பயன்படுத்தலாம். எனவே டெலிவரி ஸ்டேட்டஸ்ஸை கண்டுபிடிப்பது கடினமாகும்.
5. வாட்சப்பில் குரல் அழைப்பு, குழு வீடியோ அழைப்புகள் (video
conferencing) மிகப் பிரபலமான பயன் பாடுகள்.
வீடியோ கன்பரென்ஸிங் வசதி மூலம் ஒரே நேரத்தில் எட்டுப் பேர் இணைய முடியும்.
டெலிக்ரேமில் வீடியோ கன்பரன்சிங் வசதி இன்னும் வழங்கப்படவில்லை. தற்போதுதான் வீடியோ அழைப்பு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
6. டெலிக்ரேம் செயலி வாட்சப்பை விட பல வசதிகளைக் கொண்டிருந்தாலும் அழகிய பயனர் இடை
முகப்பைப் பொறுத்த (user friendly interface) வரை வாட்சப் முன் நிலை வகிக்கிறது.
மொத்தத்தில் வாட்சப் சிறந்ததா டெலிக்ரேம் சிறந்ததா? நீங்களே ஒரு முடிவிற்கு வரலாம்.
Post Comment