4 new features in Whatsapp வாட்ஸ்-அப் தரவிருக்கும் நான்கு புதிய வசதிகள்

4 new features in Whatsapp வாட்ஸ்-அப்பை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்த விரைவில் உங்களை அனுமதிக்கும் என பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் உடனடி செய்தியிடல் பயன்பாட்டில், அதன் மறையும் செய்திகளின் அம்சத்திற்கு கூடுதல் விருப்பங்களைச் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார் மார்க்.


"விரைவில்" உடனடி செய்தி சேவையில் பல சாதன ஆதரவு வரும் என்று ஷக்கர்பெர்க் உறுதிப்படுத்தினார். பயனர்கள் நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்க முடியும் என்று வாட்ஸ்-அப் தலைவர் கூறினார். அதேபோல் ஐபாடிற்கான பிரத்யேக வாட்ஸ்-அப் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்த இருப்பதாக மார்க் அறிவித்துள்ளார்.

"உங்கள் தொலைபேசி பேட்டரி வீரியம் இழந்து வரும்போது கூட, உங்கள் எல்லா செய்திகளையும் உள்ளடக்கத்தையும் சாதனங்களில் சரியாக ஒத்திசைய (synch) வைப்பது ஒரு பெரிய தொழில்நுட்ப சவாலாக உள்ளது, ஆனால் நாங்கள் இந்த சிக்கலைத் தீர்த்துள்ளோம், விரைவில் அந்த வசதியைப் பெற முடியும்" எனக் கூறுகிறார் ஷக்கர்பெர்க்.

கடந்த ஆண்டு செய்திகளில் ஏழு நாள் டைமரை அமைக்கும் திறனை (disappearing messages-மறைந்து விடும் முறை) அறிமுகப்படுத்திய உடனடி செய்தியிடல் சேவை, இப்போது பயனர்கள் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய படங்களையும் வீடியோக்களையும் பகிர அனுமதிக்கும் வகையில் இந்த அம்சத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. “படங்கள் வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டும் பார்வையிட முடியுமான வசதியையும் தொடங்க உள்ளோம், நீங்கள் ஓர் உள்ளடக்கத்தை அனுப்பும் போது அதனைப் பெறும் நபர் அதனைப் பார்த்த பிறகு அது தானாக மறைந்துவிடும்” என்று மார்க் அறிவிக்கிறார்.


அனைத்து புதிய அரட்டைகளுக்கும் பயன்பாட்டில் மறைந்து விடும் (disappearing messages) பயன்முறையை செயல்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு விருப்பத்தைப் பெறுவார்கள்.

பீட்டா பதிப்பில் உள்ள இந்த நான்கு சாதன ஒத்திசைவு, ஐ-பேடிற்கு பிரத்தியேக வாட்சப் படங்களை ஒரே ஒரு முறை மட்டும் பார்க்கும் வசதி, அனைத்து அரட்டைகளுக்கும் மறைந்து விடும் பயன் முறை என்பன பயனர்களுக்கு அடுத்த இரண்டொரு மாதங்களில் கிடைக்கும்.