Windows 11 Upgrades Are Free விண்டோஸ் 11 ற்கு இலவசமாக மேம்படுத்த முடியும்

 Windows 11 Upgrades Are Free இன்று, மைக்ரோசாப்ட் விண்டோஸ் தனது புத்தம் புதிய பதிப்பான விண்டோஸ் 11 ஐ வெளியிட இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 பிசிக்களுக்கு இதனை இலவசமாக மேம்படுத்தவும் முடியுமென அறிவித்துள்ளது

விண் டோஸ் 11 பற்றிய இந்த அறிவிப்பு ஒரு அறிவிப்பு மாத்திரமே தவிர அது வெளியீடு அல்ல. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 புதுப்பிப்பை 2022 இன் ஆரம்பத்திலேயே வெளியிட எதிர்பார்க்கிறது மைரோசாப்ட்.

தற்போது வெளிவந்து இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் 11 பதிப்பானது யாரோ மைக்ரோசாப்டிற்குத் தெரியாமல் அதன் வெளியீட்டுக்கு முன்னரே கசிய விட்ட ஒரு பதிப்புத்தான். ஆனால் நிச்சயம் அது மைரோசாப்டிற்குத் தெரியாமல் அது நடக்க வாய்ப்பில்லை.

Windows 11 Upgrades Are Free
அடுத்த வாரம், விண்டோஸ் 11 இன் ஆரம்ப கட்டமைப்பை விண்டோஸ் இன்சைடர் Windows Insider Program  புரோகிராமில் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. இது விண்டோஸ் விரும்பிகளின் இணைய சமூகம். அந்த சமூகத்தில் பகிரப்படும் கருத்துக்கள் முக்கியமானதாக விண்டோஸ் கருதுகிறது.

விண்டோஸ் 11 க்கான குறைந்தபட்ச கணினி தேவைகளையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

Windows 11 Minimum System Requirements

CPU1 GHz or faster with 2 or more cores on a compatible 64-bit processor or System-on-Chip (SoC)
Graphics CardCompatible with DirectX 12 or later with WDDM 2.0 driver
RAM4GB
Storage64GB
Display720p display that's greater than 9 inches diagonally, 8 bits per color channel
System FirmwareUEFI, Secure Boot capable
TPMTrusted Platform Module (TPM) version 2.0
Internet ConnectionWindows 11 Home edition requires internet connectivity and a Microsoft account to complete device setup on first use. Switching a device out of Windows 11 Home in S mode also requires internet connectivity. For all Windows 11 editions, internet access is required to perform updates and to download and take advantage of some features. A Microsoft account is required for some features.


சில அம்சங்களுக்கு குறிப்பிட்ட வன்பொருள் தேவைப்படுகிறது என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இலவச மேம்படுத்தல் என்பது ஒரு ஆச்சரியமான விடயமல்ல.. விண்டோஸ் 10 கூட சிறிது காலத்திற்கு இலவச மேம்படுத்தலாக வழங்கப்பட்டது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 , 64 பிட் செயலிகளில் மட்டுமே இயங்கும். 32 பிட் செயலிகளை ஆதரிக்காது. அதாவது, விண்டோஸ் 11 ஓஎஸ்ஸின் 32 பிட் பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிடாது. இதற்கிடையில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 க்கு தேவையான சேமிப்பிடத்தை 64 ஜிபிக்கு அதிகரித்துள்ளது.

விண்டோஸ் 10 க்கு, 32 ஜிபி டிரைவ் சேமிப்பு போதுமானதாக இருந்தது. மேலும், விண்டோஸ் 10 க்கு தேவையான குறைந்தபட்ச ரேம் திறன் விண்டோஸ் 11 இல் 2 ஜிபி லிருந்து 4 ஜிபி வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் விண்டோஸ் 11 க்கு குறைந்தபட்சம் 9 அங்குல கணினித் திரை தேவைப்படுகிறது. 9 அங்குலங்களுக்கும் குறைவான காட்சி கொண்ட தொலைபேசிகள் அல்லது மினி டேப்லெட்டுகள் விண்டோஸ் 11 ஐ எதிர்பார்க்க முடியாது.

புதிய விண்டோஸ் 11 ஓஎஸ்ஸுக்கு யுஇஎஃப்ஐ, செக்யூர் பூட் மற்றும் டிபிஎம் 2.0 ஆதரவு தேவைப்படுகிறது

இந்த தேவைகள் இல்லாமல், விண்டோஸ் 11 ஓஎஸ் சரியாக செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

This image has an empty alt attribute; its file name is 1.jpg

இந்த இணைப்பிலிருந்து PC Health Check கருவியைப் பதிவிறக்கி, உங்கள் லேப்டாப் அல்லது பிசி விண்டோஸ் 11 ஐ ஆதரிக்கிறதா இல்லையா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

This image has an empty alt attribute; its file name is 2.jpg
எனது கணினி விண்டோஸ் 11 ஐ ஆதரிக்கவில்லை

எனது கணினி விண்டோஸ் 11 ஐ ஆதரிக்கவில்லை எனக் காட்டுகிறது. புதிய கணினிகளுக்குக் கூட இப்படித்தான் அனேகமாகக் காண்பிக்கும். ஆனால் இதனை சரி செய்து கொள்ள முடியும்.