Helakuru ஹெலகுரு செயலி 10 மில்லியன் டவுன்லோடைத் தாண்டியது
Helakuru கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் டவுன்லோடை தாண்டிய முதல் மற்றும் ஒரே இலங்கையில் உருவான அண்ட்ராயிட் மொபைல் செயலியாக ஹெலகுரு #හෙළකුරු சாதனை படைத்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இச்செயலி, அனைத்து இலங்கையர்களும் தங்கள் கருத்துக்களை தாய்மொழியில் (சிங்களம் / தமிழ்) டிஜிட்டல் வெளியில் வெளிப்படுத்தவும் பல்வேறு வகையான டிஜிட்டல் சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் உதவுகிறது.
ஹெலகுரு பாஷா நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு. தனிக்க பெரேரா எனும் கணினி மென்பொருள் விருத்தியாளர் இதன் ஸ்தாபக தலைவராவார்.
PayHere, எசென, ShopHere என்பன பாஷா நிறுவனத்தின் பிற தயாரிப்புகளாகும்.