Antivirus Pioneer John McAfee Found Dead In Prison Cell
Antivirus Pioneer John McAfee Found Dead மெக்காஃபி எனும் பிரபலமான நச்சு நிரல் எதிர்ப்பு (anti virus software) மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்காஃபி ,ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 75
நேற்று புதன்கிழமை (June 23) பிற்பகல் மெக்காஃபி அவரது செல்லில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
மெக்காஃபியை அமெரிக்காவிற்கு ஒப்படைக்க ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் அங்கீகரித்த பின்னர் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்க வழக்குரைஞர்கள் மெக்காஃபிக்கு எதிராக வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்தை அடுத்து அவர் ஸ்பெயினின் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
வைரஸ் தடுப்பு மென்பொருளான மெக்காஃபியை (McAfee) 1987 ஆம் ஆண்டில் கண்டுபிடிப்பதில் மெக்காஃபி மிகவும் பிரபலமானவர். அவரது நிறுவனம் ஐடி பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய வணிக பிராண்டாக மாறியது. இருப்பினும், 1994 ஆம் ஆண்டில் மெக்காஃபி இந்த வணிகத்தை விட்டு வெளியேறினார்.
அவர் தனது ட்விட்டர் கணக்கின் மூலம் கிரிப்டோகரன்ஸிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். ஆனால் கடந்த அக்டோபரில், நீதித்துறை மெக்காஃபி பல கிரிப்டோகரன்ஸிகளுடன் சட்டத்துக்கு முறணான நிதி மோசடி திட்டத்தை மேற்கொண்டதாகச் சுட்டிக்காட்டியது. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அவர் பிரபலமான நாணயங்களை மலிவான விலையில் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் முதலீட்டு ஆலோசனையைப் பின்பற்றிய அவரது ட்விட்டர் பின்தொடர்பவர்களிடம் அவற்றை உயர்ந்த விலையில் விற்றுள்ளார்.