7 lesser-known Telegram features

 

7 lesser-known Telegram features டெலிகிராம் செயலியில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் இங்கே.

1. Edit Sent Messages

7 lesser-known Telegram features

வாட்சப்பில் அனுப்பிய செய்தியை மறுபடி திருத்தம் செய்ய முடியாது. ஆனால் டெலிகிராம் செயலி  முன்னர் அனுப்பிய செய்திகளைத் திருத்த உங்களை அனுமதிக்கிறது.

அதற்கு  நீங்கள் திருத்த விரும்பும் செய்தியைத் தேர்ந்தெடுத்து மேலே உள்ள “Edit (பேனா)” ஐகானைத் தட்டுங்கள். மாற்றங்களைச் செய்தபின் "Edited (திருத்தப்பட்டது) " எனும் லேபளைக் காண்பிக்கும். எனினும் செய்திகளை அனுப்பி  48 மணிநேரம் வரை மட்டுமே நீங்கள் திருத்த முடியும் என்பதையும் நினைவில்  கொள்ளுங்கள்.

2. Silent Messages

7 lesser-known Telegram features

நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் நபர் வேலைப் பழுவாக (Busy) இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவரை இடையூறு செய்யாமல் செய்தியை அவருக்கு அனுப்ப முடியும். அதற்கு  சைலண்ட் (மௌன ) மெசேஜ் அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்பும் போது, பெறுநர் ‘Do not disturb mode  (தொந்தரவு செய்யாதே) பயன்முறையை’ இயக்க நிலையில் வைக்காவிட்டாலும்  எந்த ஓசையும் எழுப்பாமல், vibration அதிர்வு கூட இல்லாமல் செய்திகள் அனுப்பப்படும்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, செய்தியைத் தட்டச்சு செய்து, பின்னர் "send " பட்டனைத் அழுத்த ஒரு மெனு தோன்றும். அங்கு  " Send without sound  ஒலி இல்லாமல் அனுப்பு" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

3. Schedule Messages

உங்கள் செய்திகளை அனுப்ப வேண்டிய நேரத்தையும் டெலிகிராமில் திட்டமிடலாம். அதற்கு "send” பட்டனை  அழுத்த வேண்டும். தோன்ற்ம் மெனுவில் " Schedule message" என்பதைத் தேர்ந்தெடுத்து தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு விருப்பமான நேரத்தில் செய்தி அனுப்பப்படும்.

அண்ட்ராய்டிற்கான டெலிகிராம் பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோரில் 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது.

4. Self-destruct Media in Normal Chats வழமையான அரட்டைகளில் சுயமாக  அழிக்கும் வசதி

செய்தியில் அனுப்பும் படங்கள் வீடியோக்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவை சுயமாக  அழிந்து விடுமாறு செய்ய டெலிகிராம்  அனுமதிக்கிறது. இந்த அம்சம் முன்பு தனி “Secret Chat  ரகசிய அரட்டை” களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்து. இருப்பினும், சமீபத்திய புதுப்பிப்பு மூலம், இப்போது நீங்கள் சாதாரண அரட்டைகளிலும் படங்கள் மற்றும் வீடியோக்களை சுயமாக அழியுமாறு செய்யலாம்.

அதற்கு நீங்கள்  படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுத்து "டைமர்" பட்டனைத் தட்டுங்கள். அப்போது அவை  தானாக நீக்கப்பட வேண்டிய நேரத்தை தெரிவு  செய்ய முடியும்.

5. Delete Sender’s Message அனுப்பியவரின் செய்தியையும் நீக்க முடியும்

வாட்சப்பில் நீங்கள் நண்பருக்கு அனுப்பிய செய்தியை உங்கள் போனிலும் நண்பரின் போனிலும் கூட அனுப்பும் வ்சதி (Delete for everyone) உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் டெலிகிராமில் நீங்கள் அனுப்பிய செய்திகளை மட்டுமல்லாது நண்பர் உங்களுக்கு  அனுப்பிய செய்திகளையும் இரண்டு முனைகளிலும் நீக்கும் வசதி உள்ளது.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, நண்பரிடம் பெற்ற செய்தியைத் தேர்ந்தெடுத்து delete பட்டனை  தட்டுங்கள்.  அப்போது " Also delete for X  (X ற்கானதையும் நீக்கு) "என்பதைத் தேர்ந்தெடுத்து "Delete பட்டனைத் தட்டுங்கள். செய்தி இரண்டு முனைகளிலிருந்தும் மறைந்துவிடும்.

6. Edit Videos வீடியோக்களைத் திருத்த முடியும்

டெலிகிராமில் வீடியோக்களையும் திருத்தலாம், இந்த அம்சத்தைப் பயன்படுத்த, அரட்டையைத் திறந்து, நீங்கள் அனுப்ப விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுங்கள். வீடியோ எடிட்டரைத் திறக்க ட்யூனிங் ஐகானைத் தட்டுங்கள். வீடியோவில் saturation, contrast, exposure, (செறிவு, மாறுபாடு, வெளிப்பாடு) போன்ற பல கூறுகளை நீங்கள் சரிசெய்யலாம்.

7. Quick GIF and YouTube Search விரைவான  GIF மற்றும் YouTube தேடல்

டெலிகிராம் செயலியிலிருந்து  வெளியேறாமலே ஒரு GIF அனிமேஷன் அல்லது ஒரு YouTube வீடியோ இணைப்பை அனுப்ப டெலிகிராம் அனுமதிக்கிறது.  அதற்கு . @Gif அல்லது @youtube என தட்டச்சு செய்து உங்கள் தேடல் வினவலை உள்ளிடவும். அரட்டைத் திரையில் தேடல் முடிவுகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.

தே ஆட்டிக்கல் கோராவில்