How to hide chats on Whatsapp?
வாட்சப் (WhatsApp) செயலியில் பல்வேறு வசதிகள் உள்ளன. தனது அவற்றில் ஒன்று உரையாடல்களை(chats) காப்பகப்படுத்தும் (archive-ஆர்கைவ்) அம்சம். இதன் மூலம் தனிப்பட்ட தொடர்புகள் (individual contacts) மற்றும் குழுக்களின் (groups) உரையாடல்கள் மற்றும் அரட்டைகளை (chats) காப்பகப்படுத்த (archive) முடியும்.
நீங்கள் ஒரு உரையாடலைக் காப்பகப்படுத்தும்போது வழமையான உரையால்டல்கள் (chats) பகுதியிலிருந்து வேறொரு இடத்திற்கு அது நகர்த்தப்படுவதோடு சேட்ஸ் பகுதியிலிருந்து மறைக்கப்படும். ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் சேவைகளிலும் இந்தக் காப்பகப்படுத்தும் வசதியுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
இந்த ஆர்கைவ்ட் சேட் (archive chat) வசதி மூலம் அரட்டைகளை இரகசியமாக யார் கண்ணிலும் படாதபடி மறைத்து வைக்க முடியும். அதே போன்று தேவயற்ற அரட்டைகளையும் இவ்வாறு ஆர்க்கைவ் செய்து வைக்க முடியும்.
மிக முக்கியமாக வாட்சப் குரூப்களை ஆர்கைவ் செய்து வைப்பதன் மூலம் எங்களை அறியாமல் தவறுதலாகச் சில வேளைகளில் செய்திகள் குரூப்புகளில் பதிவிடப்படுவதையும் அதனால் ஏற்படும் சங்கடங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
காப்பகத்தில் சேர்ப்பதனால் அந்த அரட்டைகள் அழிந்து விடுவதில்லை. அவற்றை நீங்களாக நீக்கும் வரை அவை ஆர்கைவ் ஃபோல்டரில் பாதுகாப்பாக இருக்கும். எத்தனை உரையாடல்களை நீங்கள் காப்பகப்படுத்த முடியும் என்பதற்கு எல்லை எதுவும் இல்லை.
ஓர் அரட்டையை ஆர்க்கைவ் செய்வது எப்படி?
முதலில் வாட்சப் திறந்து சேட்ஸ் பகுதியில் மறைக்க விரும்பும் அரட்டையின் மீது அழுத்துங்கள்.
அப்போது மேல் பகுதியில் புதிதாக ஒரு பட்டணைக் காண்பிக்கும். அந்த பட்டணில் தட்டும் போது அரட்டை மறைக்கப்படும்.
ஒரு வேளை பட்டண் தோன்றா விட்டால் மேலே மூன்று புள்ளி மெனு பட்டனில் தட்டி வரும் மெனுவில் Archive Chat என்பதைத் தெரிவு செய்யுங்கள்
மறைக்கப்பட்ட அரட்டைகளை பார்க்க வேண்டுமானால் சேட்ஸ் பகுதியில் இறுதி வரை கீழ் நோக்கி ஸ்க்ரோல் (scroll) செய்ய வேண்டும்.
அங்கு Archived எனும் தெரிவைக் காண்பீர்கள். அதன் மீது தட்டும் போது காப்பகப்படுத்திய அத்தனை அரட்டைகளையும் காண முடியும்.
சமீப காலம் வரை காப்பகப் படுத்திய தனிப்பட்ட அல்லது குழு அரட்டைகளிற்கு புதிதாக ஒரு செய்தி கிடைக்கப் பெறும்போது சேட்ஸ் பகுதியிலேயே அதுபற்றிய அறிவிப்பை காண்பித்தது.
ஆனால் வாட்சப்பின் அண்மைய அப்டேட் படி காப்பகப் படுத்திய தனிப்பட்ட அல்லது குழு அரட்டைகளிற்கு ஒரு புதிய செய்தி கிடைக்கப் பெறும்போது சேட்ஸ் பகுதியில் காண்பிக்காமல் காப்பகப் படுத்திய செய்திகளின் எண்ணிக்கையை மட்டுமே காண்பிக்கும். அதன் மீது தட்டி புதிய செய்தியைப் பார்வையிட முடியும்.
மறுபடியும் அந்த அரட்டைய வழமையான சேட்ஸ் பகுதியில் சேர்க்க விரும்பினால் ஆர்கைவ்ட் சேட்ஸ் பகுதிக்குச் சென்று தேவையான அரட்டையின் மீது அழுத்துங்கள். அப்போது மேல் பகுதியில் அன்-ஆர்கைவ் Unarchive செய்வதற்கான பட்டன் தோன்றும். அந்த பட்டனில் தட்டும்போது மறுபடி வழமையான chats பகுதிக்கு வந்து சேரும்.