Applying for birth, marriage, and death certificates are now online
Requesting copies of birth, marriage, and death certificates online பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை online இல் விண்ணப்பித்தல்.
இலங்கையில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை எந்தத் தடையும் இல்லாமல் வழங்குவதற்கான ஆன்லைன் முறையைத் தலைமை பதிவாளர் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆன்லைன் சேவை 04.08.2021 முதல் செயற்பட ஆரம்பிக்கும்
இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்புவோருக்காகப் பதிவாளர் ஜெனரல் திணைக்களம் ஒரு பயனர் கையேட்டையும்-user manual வெளியிட்டுள்ளது. இந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சில படிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் இந்தச் சேவையைப் பெற முடியும்.
பொதுமக்கள் தங்கள் மொபைல் போன் அல்லது கணினி ஊடாக சான்றிதழ் நகல்களைக் கோர முடியும்.
முதலில் online.ebmd.rgd.gov.lk வலத் தலத்திற்குச் சென்று நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து உங்கள் தொலைபேசி எண் உள்ளிட்ட சில அடிப்படை விவரங்களைக் கொடுத்து உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வரும் "பின் குறியீடு - PIN Code " இலக்கத்தை இணையதளத்தில் வழங்கி உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்க (verify) வேண்டும்.
https://online.ebmd.rgd.gov.lk/request
அனைத்து விவரங்களும் சரியாக உள்ளிடப்பட்டவுடன் இந்தச் சேவைக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இங்கு மாஸ்டர் அல்லது வீசாக் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.
இந்த இணையதளத்தில் தொடர்புடைய சேவை விவரங்களை வழங்குவதோடு தேவையான பிறப்பு, இறப்பு அல்லது திருமண சான்றிதழ்களைப் பதிவு செய்யப்பட்ட தபால் (registerd post) அல்லது கூரியர் (courier) முறையைப் பயன்படுத்தி வீட்டுக்கு வரவழைக்க முடியும். அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்குச் சென்றும் பெற்றுக் கொள்ள முடியும்.