YouTube 'Shorts' Creators Can Now Start Earning With Viral Videos

 

YouTube 'Shorts' Creators Can Now Start Earning With Viral Videos யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் இப்போது வைரல் வீடியோக்களுடன் மாதத்திற்கு $ 10,000 வரை சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்

இம்மாதம் முதல்  தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள யூடியூபர்களின் படைப்புகள் வைரல் கிளிப்களின் ஆகும் பட்சத்தில் .100 மில்லியன் டாலர் யூடியூப் ஷார்ட்ஸ் ஃபண்டின் ஒரு தொகை வெகுமதிக்குப்  போட்டியிடலாம்-

ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான படைப்பாளர்களை நிதியிலிருந்து பணம் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கும், இது குறுகிய வடிவமான டிக்டாக் போன்ற வீடியோ அம்சத்தைப் பணமாக்குவதற்கான முயற்சிகளின் முதல் படியாகும். அளவுகோல்களை பூர்த்தி செய்யும் படைப்பாளிகள் விடியோ பார்வைகளின் எண்ணிக்கை  மற்றும் அவர்களின் ஷார்ட்ஸின் ஈடுபாட்டின் அடிப்படையில் $ 100 முதல் $ 10,000 வரை பெர முடியும்.  இந்த ஷார்ட்ஸ் வீடியோக்கள் 60 வினாடிகள் வரை நீளமாக இருக்கும்.

100 மில்லியன் டாலர் யூடியூப் ஷார்ட்ஸ் ஃபண்ட் மீதமுள்ள 2021 மற்றும் 2022 ஆஅண்டுகளில்  இல் விநியோகிக்கப்படும். யூடியூப் செயலியில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் ஷார்ட்ஸ் ஃபண்டிலிருந்து வெகுமதி க்குத் தகுதிபெறும் படைப்பாளர்களுக்கு அறிவிப்பதாக யூடியூப் கூறுகிறது; போனஸ் பணம் காலாவதியாகும் முன் அவர்கள் 25 ஆம் தேதிவரை உரிமை கோரலாம்.

முன்னதாக யுஎஸ் இல் அறிமுகப்படுத்தபட்ட  யூடியூப் ஷார்ட்ஸ் கடந்த மாதம் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகமானது.  ,பைட் டான்ஸின் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக அறிமுகமாந்து. இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் Instagram’s Reels மற்றும் ஸ்னாப்சாட்டின் ஸ்பாட்லைட்டும் அது போன்றதே Snapchat’s Spotlight. ). யூடியூப் ஷார்ட்ஸ் விரைவாக உலகளாவிய வெற்றி பெற்றது என்று கூகிள் கூறுகிறது: இந்த அம்சம் இப்போது 15 பில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய தினசரி பார்வைகளை உருவாக்குகிறது,

இப்போதைக்கு, 10 நாடுகளில் உள்ள படைப்பாளிகள் மட்டுமே யூடியூப் ஷார்ட்ஸ் ஃபண்ட் கட்டணங்களைப் பெற தகுதியுடையவர்கள்: அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மெக்ஸிகோ, நைஜீரியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா. துரதிர்ஷ்டவசமாக இலங்கை இந்தப் பட்டியலில் இல்லை. எனினும் பிற நாடுகளுக்கு விரைவில் அது விரிவு படுத்தப்படும்.

ஷார்ட்ஸ் ஃபண்டிலிருந்து பணம் பெறுவதற்குத் தகுதிபெற, சேனல்கள் கடந்த 180 நாட்களில் குறைந்தபட்சம் ஒரு தகுதியான குறும்படத்தை பதிவேற்றியிருக்க வேண்டும். அவர்கள் YouTube இன் சமூக வழிகாட்டுதல்கள் (community guidelins), பதிப்புரிமை விதிகள் மற்றும் பணமாக்குதல் (monetization) கொள்கைகளுக்கு இணங்க வேண்டும்