Shortcut to Web address


இணைய தளமுகவரிக்குக் குறுக்கு வழி

ஒவ்வொரு இணையதள முகவரியும் http://www என ஆரம்பிப்ப தோடு .com, .net, .org போ‎‎ன்ற வெவ்வேறு ‎ டொமேன் பெயர்களைக் (domain name) கொண்டிருக்கும் எ‎ன்‎பது நீங்கள் அறிந்ததுதா‎ன். இவற்றை web browser ன் address bar இல் ஒவ்வொரு இணைய தள முகவரியையும் டைப் செய்யும் போதும் சேர்க்க வேண்டும். எனினும் ஒவ்வொரு முறையும் இவற்றை டைப் செய்வதற்கு அனேகருக்கு சோம்பலாயிருக்கும்.


 இதனைப் உணர்ந்து இ‎ன்டர்னெட் எக்ஸ்ப்லோரரில் ஒரு குறுக்கு வLழிதரப்பட் டுள்ளது. நிறுவன பெயரை மட்டும் டைப் செய்து கீபோர்டில் கன்ட்ரோல் மற்றும் எ‎ன்டர் விசைகளை ஒரே நேரத்தில் தட்ட http:// www மற்றும் .com பகுதிகளை வெப் பிரவுஸரே தானாகப் போட்டுக் கொள்ளும்படி செய்யலாம். உதாரணமாக yahoo என டைப் செய்து Ctrl + Enter விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த http://www.yahoo.com என முழுமையாகத் தோ‎ன்றும். இந்த வசதியை இ‎ன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் .com எனும் டொமே‎‎ன் பெயருக்கு மட்டுமே தருகிறது. எனினும் மொஸில்லா பயர்பொக்ஸ் இ‎‎ன்னும் கூடுதலாக .net, .org ஆகிய டொமே‎ன்‎ பெயர்களுக்கும் இந்த வசதியைத் தருகிறது. பயபொக்ஸில் .net தளங்களுக்கு Shift+Enter விசைகளையும் .org தளங்களுக்கு Shift+Ctrl+Enter விசைகளையும் ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். Alt+Enter விசைகளை அழுத்த http://www எனும் பகுதியை மட்டும் வர வைக்கலாம்.

அனூப்-