Google Earth


பூமியைச் சுற்றிச் சுழன்று வர Google Earth


கூகில் நிறுவனத்தின் கூகில் மேப்ஸ் (Google Maps) இணையதளம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இந்த கூகில் மேப்ஸ் மூலம் உலகின் எந்தவொரு இடத்தையும் செய்மதி மற்றும் விமானம் மூலம் (Aerial Photograph) எடுக்கப்பட்ட நிஜ படங்களாகப் பார்க்கலாம். அதாவது நாடு, நகரம், காடு, மலை, ஆறு, குளம், பாதை, கட்டடம், பாலம் என எந்த ஒரு இடத்தையும் பார்க்க முடியும்.

கூகில் தேடு பொறியில் (search engine) ஒரு தகவலைத் தேடுவது போன்றே இங்கும் நாம் அறிய விரும்பும் இடத்தை முக்கிய சொற்களை வழங்குவதன் மூலம் அதற்குரிய முடிவுகள் மேப்பில் அடையாளமிட்டுக் காண்பிக்கப்படும். Maps, Satellite, Hybrid என மூன்று வகையான மேப்பைத் தருகிறது கூகில் மேப்ஸ்.

நீங்கள் பார்க்க விரும்பும் ஓரிடத்தை இலகுவாகத் தேடித் (search) தருவதோடு ஒரு இடத்தை அண்மித்துப் (zoom) பார்க்கவும் முடிகிறது. சில பிரதேசங்களை பாதுக்காப்புக் காரணங்களுக்காக zoom செய்து பார்க்க அனுமதிப்பதில்லை. அதேபோல் சில பிரதேசங்கள் இன்னும் புதுப்பிக்கப் படாமலும் (update) இருக்கி ன்றன.

இந்த கூகில் மேப்ஸ் ( http://maps.google.com) ஆதரவுடனேயே உலகப் படத்தில் நீங்கள் அறிந்த இடங்களையெல்லாம் அடையாளமிடக் கூடிய வசதியைத் தரும் விக்கிமேப்பியா (http://wikimapia.org ) எனும் வெப் தளம் உருவாக்காப்பட்டுள்ளது. உலகின் எந்தவொரு இடத்துக்கும் வழி சொல்லி விடுகிறது இந்த இணைய மேப்

கூகில் மேப்ஸ், விக்கிமேப்பியா என்பன ஒரு வெப் பிரவுஸரி லேயே இயங்குகின்றன. எனினும் இவற்றைப் போலல்லாது கணினியின் டெஸ்க் டொப்பிலிருந்து இயக்கக் கூடிய வடிவில் கிடைப்பதே கூகில் ஏர்த் எனும் மென்பொரு ளாகும்.

சூம் (zoom) செய்தல், கவிழ்த்தல் ( tilt ), சுழற்றுதல் (rotate) போன்ற பல விதமான செயற்பாடுகளுக்கான பட்டன்களை இந்த கூகில் ஏர்த் இடை முகப்பு கொண்டுள்ளது. பூமியின் எந்தப் பகுயதியை யும் எந்தக் கோணத்திலும் சுற்றிச் சுழன்று பார்க்கலாம்.

கூகில் மேப்பில் இல்லாத பல வசதிகள் இந்த கூகில் ஏர்த்தில் கிடைக்கிறது. எனினும் அதனைப் பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம். கூகில் ஏர்த்தை ஒவ்வொரு முறை திறக் கும் போதும் அது கூகில் சேர்வரை அணுகி இணைப்பை உருவாக்கிக் கொள்கிறது.

அண்ட வெளியிருந்து பார்க்கும்போது தெரியும் பூமியின் தோற்றத்துடன் திறக்கிறது கூகில் ஏர்த். மவுஸை க்ளிக் செய்யும் போதும் ட்ரேக் செய்யும்போதும் பூமிப் பந்து சுழல்கிறது. ஸ்க் ரோல் பட்டன் மூலம் ஒரு இடத்தை அண்மித்தும் பார்க்க முடிகிறது.

நீங்கள் குறிப்பிடும் இடத்தை அடுத்த நிமிடமே உங்கள் கண் முன்னே நிறுத்துவதுடன் நீங்கள் பார்வைIட்ட இடங்களை offline இல் பார்வை யிடும் வண்ணம் சேமிக்கப்படுBறது. இதனைப் பயன்படுத்தும் போது ஒரு கணினி விளையாட்டில் ஈடுபடுவது போன்ற ஒரு அனுபவத்தை பெறலாம்.

இதனுடன் இணைக்கப்பட்டுள்ள (GoogleSky) கருவியின் மூலம் நட்சத்திரங் கள் மற்றும் வானியல் சார்ந்த படங்களைப் பெறக் கூடியதாகவுள்ளது. அதேபோல் கடந்த மாதம் வெளியிடப் பட்ட கூகில் ஏர்த்தின் புதிய பதிப்பில் ஸ்ட்ரீட்வீயூ (Street View) எனும் புதிய அம்சமும் உள்ளிணைக்கப் பட்டுளது. இதன் மூலம் உலகின் பெரு நகரங்களிலுள்ள தெருக்களை 360 பாகையில் சுற்றிப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. எனினும் இது இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

கூகில் ஏர்த் இலவச பதிப்புடன் கூகில் ப்ளஸ், கூகில் ப்ரோ வென மேலும் இரு பதிப்புகளும் உள்ளன. எனினும் இவற்றைக் கட்டணம் செலுத்தியே உபயோகிக்க வேண்டும். இலவச பதிப்பை விட இவை மேலும் பல வசதிகளைக் கொண்டுள்ளன. கூகில் ஏர்தின் இலவச பதிப்பை earth.google.com எனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

கூகில் ஏர்த் மாணவர்கள், ஆசிடரியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆய்வாளர்கள் மட்டுமன்றி அனைவருக்கும் உபயோக மான ஒரு மென்பொருள் எனலாம். இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள 500 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட வேகம், 128 எம்.பீJனைவகம், 3டீ ஆதரவளிக்கும் வீ.ஜீ.ஏ கார்ட் என்பவற்றுடன் இணைய இணைப்பும் இருத்தல் அவசியம். இதனை விண்டோஸ் 2000, எக்ஸ்பீ விஸ்டா மட்டுமன்றி லினக்ஸ், மேக் இயங்கு தளங்களிலும் நிறுவிக்கொள்ளலாம்.

-அனூப்-