What is high speed USB 2 ?


அதி வேக USB 2  என்றால் என்ன?

கீபோட், மவுஸ், ப்ரின்டர் போன்ற உள்ளிடும் மற்றும் வெள்யிடும் சாதனங்களைக் கணினியுடன் இணைப்பதற்கான ஒரு வன்பொருள் இடை முகப்பே யூ.எஸ். பீ போர்ட் (USB Port) என்பதாகும். Universal Serial Bus என்பதன் சுருக்கமே (USB) யூ.எஸ்.பீ இந்த யூ.எஸ்.பீ போர்டுகள் தற்போது அனைத்துக் கணினிகளிலும் இணைந்து வருகின்றன. சிஸ்டம் யூனிட்டின் முன்புறம், ப்ன்புறம், பக்க வாட்டில் என ஒன்றுக்கு மேற்பட்ட யூ.எஸ்.பீ போர்டுகள் இணைந்து வருகின்றன. யூ.எஸ்.பி போர்டுகளை எளிதாகப் பயன்படுத்த முடிவதுடன் கணினியிலுள்ள ஏனைய சீரியல், பெரலல் போர்டுகளைப் போலல்லாது மிக வேகமாகவும், தரவுகளைக் கடத்த வல்லவை.

யூ.எஸ்.பீ போர்ட் மூலமாக பல்வேறு சாதனங்களை கணினியில் இணைக்கலாம். யூ.எஸ்.பீ போர்ட் மூலம் இணைக்கக் கூடிய சாதனங்களாக கீ போர்ட், மவுஸ், ப்ரின்டர், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா, வெப் கேம், ,ஹாட் டிஸ்க், மோடம், ஸ்பீக்கர், மொபைல் போன், ஐ-போட் என ஒரு நீண்ட பட்டியலே போடலாம். யூஎஸ்பீ சாதனங்களில் மிகவும் பிரசித்தமானதும், பலராலும் உபயோகிக்கப்படும் கருவியாக பென் ட்ரைவைக் (Pen Drive) ஐக் குறிப்பிடலாம்

அத்துடன் யூ.எஸ்.பீ வழியாக ஒரே நேரத்தில் 127 சாதனங்களைக் கணினியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பியல்புகளில் ஒன்று. தற்போது வரும் அனைத்து வன்பொருள் சாதனங்களான கீபோர்ட், மவுஸ், ப்ரின்டர், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் என அனைத்து சாதனகங்களும் யூஎஸ்.பீபோர்ட் மூலமாக இணைத்துக் கொள்ளக் கூடியதாகவே வருகின்றன.

கணினியை இயங்கு நிலையில் வைத்தே எந்த வொரு யூ.எஸ்.பீ சாதனத்தையும் கணினியுடன் பொருத்தவோ, அல்லது அகற்றவோ முடியும் என்பது யூ.எஸ்.பீ போர்டில் கிடைக்கும் மற்றுமொரு வசதியாகும்.

ஒரு யூ.எஸ்.பீ சாதனத்தை கணினியில் இலகுவாக இணைத்து விடலாம். கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளம் யூ.எஸ்.பீ போர்டுகளை செயற்படுத்தும். அதே வேளை ஒரே நேரத்தில் பல வகையான யூ. எஸ்.பீ சாதனங்களை கணினியில் இணைத்துக் கொள்ள (USB hub) எனும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

யூ.எஸ்.பீபோர்ட் மூலம் 0.5 amps (500 milliamps) அளவான மின்சாரமும் பிரயோகிக்கப்படுகிறது. எனவே குறைந்த அளவு மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள் கணினியிலிருந்தே அதனைப் பெற்றுக் கொள்ள முடியும். மவுஸ், கீபோர்ட், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் போன்றவற்றின் இயக்கத்திற்கான மின் சக்தியை யூ.எஸ்.பீ போர்ட் மூலமாக கணினியிருந்தே வழங்கலாம். எனினும் பிரின்டர், ஸ்கேனர் போன்ற யூ.எஸ்.பீ சாதனங்களை கணினியில் இணைக்கும் போது அதற்கான மின் இணைப்பும் தனியாக வழங்க வேண்டும்.

யூஎஸ்பீ போர்டுகள் முதன் முதOல் 1997 ம் ஆண்டில் கணினிகளில் அறிமுகமாகின. யூ.எஸ்.பீ போர்டுகள் யூ.எஸ்.பீ 1, யூ.எஸ்.பீ 1.1, யூ.எஸ்.பீ 2 என தரப்படுத்தப்படுகின்றன. பழைய கணினிகள் யூ.எஸ்.பீ1. ஐயே ஆதரிக்கனின்றன. எனினும் தற்போது யூ.எஸ். பீ2 ஐ ஆதEக்கும் சாதனங்களே பாவனையிலுள்ளன. யூ.எஸ்.பீ 2 வகை போர்ட்டுகள் 1.5 Mbps (megabits per second) எனும் (Low Speed) குறைந்த வேகத்திலும், 12 Mbps எனும் (Full Speed) முழுமையான வேகத்Aலும் 480 Mbps அதியுயர் வேகத்திலும் (Hi-Speed) டேட்டாவைக் கடத்துகின்றன. இவற்றுள் 480 Mbps வேகம் கொண்ட அதியுயர் வேகம் கொண்டவை இவை யூ.எஸ்.பீ2 வகையைச் சேர்ந்ததாகும்.

யூ.எஸ்.பீரி2 வை ஆதEக்கக் கூடிய ஒரு ஹார்ட் வெயர் சாதனத்தை யூ.எஸ்.பீ 1 ஆதரவு கொண்ட கணினியில் இணைக்கும் போது விண்டோஸ் டாஸ்க் பாரில் சிஸ்டம் ட்ரே பகுதியில் ஒரு செய்தி தோன்றுவதை நீங்கள் பர்த்திருக்கலாம். யூ.எஸ். பீ 2 ஆதரவழிக்கக் கூடிய கணினியில் இந்த சாதனம் உயர் வேகத்தில் டேட்டாவைக் கடத்தும் என்பதனையே அந்த செய்தி குறிக்கிறது.

யூஎஸ்பீ 1 , 1.1, 2 என பல தரப்படுத்தல்கள் இருந்தாலும் அனைத்தும் ஒரே வகையான கனெக்டர்களையே கொண்டிருக்கும். கனெக்டர்களில் மாற்றம் எதுவுமில்ல. யூ.எஸ்.பீ 2 தரத்தைச் சார்ந்த சாதனத்தை யூ.எஸ்.பீ 1 தரம் கொண்ட கணினியிலும் இணைத்துக் கொள்ளலாம். எனினும் அவ்வாறு இணைக்கும் போது யூ.எஸ்.பீ 1 தரத்திற்கு ஏற்றவாறு குறைந்த வேகத்திலேயே சாதனம் டேட்டாவைக் கடத்தும். இதனை ஆங்Bலத்தில் backwards compatible என்பர்.

உமது கணினியில் எந்த வகையான யூ.எஸ்.பீ போர்ட் உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? My Computer ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அங்கு தோன்றும் டயலொக் பொக்ஸில் Hardware எனும் டேபில் க்ளிக் செய்து Device Manager தெரிவு செய்யுங்கள். அங்கு பட்டியலிடப்படும் சாதங்களிலிருந்து Universal Serial Bus controller என்பதநன விரிக்க Enhanced என வந்தால் அது யூ.எஸ்.பீ 2 ஆகும். இல்லையென்றால் யூ.எஸ்.பீ 1.0 அல்லது 1.1 எனக் கொள்ளுங்கள்.

-அனூப்-