How to delete recent documents


அண்மையில் பார்த்த பைல் பட்டியல்களை நீக்க

விண்டோஸ் எக்ஸ்.பீ இயக்கச் சூழலில் பணியாற்றும்போது நாம் அண்மை யில் திறந்து பார்த்த அல்லது பணியாற்றிய ஆவணங்கள் ஸ்டாட் மெனுவில் டொகுமென்ட்ஸ் லிஸ்டில் பதிவாகிவிடும். மீண்டும் அதே டொகுமென்ட்டைத் திறந்து பணியாற்ற வேண்டியிருந்தால் நீங்கள் அந்த ஆவணத்தை வேறு எங்கும் தேட வேண்டாம். இந்த டொகுயுமென்ட்ஸ் லிஸ்டிலிருந்தே இலகுவாகத் திறந்து விடக் கூடிய வசதியை விண் டோஸ் தருகிறது. ஆனல் இந்த வசதியே சில நேரம் நமக்கு ஆப்பும் வைத்து விடலாம். ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் நாம் கடைசியாக என்ன பைலில் பணியாற்றினோம் என்பதை அடுத்தவர் கள் இந்த மை ரீசன்ட் டொகுயுமன்ட்ஸைக் கொண்டு மோப்பம் பிடித்து விட வாய்ப்புள்ளது. அதனால் இது போன்ற பாதுகாப்பற்ற சூழலில் எந்தத் தடயமும் வைக்காமல் அந்த ரீசன்ட் டொகுயுமென்ட்ஸ் லிஸ்டை காலி செய்து விட்டால் உங்கள் ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். சரி, அதனை எவ்வாறு நீக்குவது?

ஸ்டாட் பட்டனில் ரைட் க்ளிக் செய்து வரும் கன்டெக்ஸ்ட் மெனுவில் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக் ஸில் ஸ்டாட் மெனு டேபின் கீழுள்ள கஸ்டமைஸ் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது இன்னுமொரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு எட்வான்ஸ்ட் டேபின் கீழ் Recent documents பகுதியில் Clear List என்ப தைக் க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான். அத்துடன் List my most recently opened documents என்பதைத் தெரிவு நிலையிலிருந்து நீக்கி விட்டால் (uncheck) அண்மையில் பார்த்த டொகுயுமென்ட்ஸ் லிஸ்டே இனி வேண்டாம் என்றும் சொல்லிவிடலாம்.

இந்த ஸ்டாட் மெனுவும் இரு வகையான தோற்றங்களைக் கொண்டுள் ளதால் இரண்டிலும் வெவ்வேறு முறைகளிலேயே செட்டிங்ஸ் மாற்றப் படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

-அனூப்-