Some useful MS PowerPoint tips


எம்.எஸ். பவபொயின்ட் -  தெரிந்ததும் தெரியாததும்


Add caption
பவபொயின்ட் ப்ரஸன்டேசன் ஒன்றினை ஸ்லைட் ஸோவாகப் பார்வையிடும் போது ஸ்லைட் ஸோவில் முன் பின் நகர்வதற்கான கட்டளைகளை மட்டுமே நம்மில் அனேகம் பேர் அறிந்து வைத்துள் ளோம். ஆனால் அது தவிர மேலும் பல வசதிகளைப் பவபொயின்ட் வழங் குகிறது. கீழே தரப்பட்டுள்ள கீபோர்ட் குறுக்கு வLகளையும் கட்டளை களையும் ஸ்லைட் ஸோவை ஓட Cட்டு செயற்படுத்திப் பார்க்கலாமே.

• ஸ்லைட் ஸோவை ஆரம்பிக்க F5
• ஒவ்வொரு ஸ்லைடாக முன் செல்ல N, Space, Page Down, , Enter
• ஒவ்வொரு ஸ்லைடாக பின் செல்ல P, Backspace, Page Up, ,,
• தானியங்கி முறையில் செயற்படும் ஸ்லைட் ஸோவை தற்காலிகமாக மீள ஆரம்பிக்கவும் S அல்லது ( + )
• ஸ்லைட் ஸோவை விட்டு வெளியெற ESC, CTRL+BREAK, அல்லது HYPHEN ( - )
• மறைத்து வைக்கப்பட்டுள்ள ஸ்லைடைப் பார்வையிட H
• ஸ்லைட் இலக்கத்தை டைப் செய்து என்டர் விசையை அழுத்த குறித்த ஸ்லைடைப் பார்வையிடலாம்.
• இலக்கம் ஒன்றை டைப் செய்து என்டர் விசையை அழுத்னால் முதல் ஸ்லைடுக்கு வரலாம்.
• மவுஸின் இரண்டு பட்டன்களையும் ஒரே நேரத்தில் இரண்டு வினாடிகளுக்கு அழுத்திக் கொண்டிருந்தாலும் முதல் ஸ்லைடுக்கு வந்து Cடலாம்.
• கறுப்புத் திரையைத் தோன்றச் செய்யவும் அதிலிருந்து மீளவும் B அல்லது PERIOD ( . )
• வெண் திரையைத் தோன்றச் செய்யவும் அதிலிருந்து வெளியேறவும் W அல்லது COMMA ( , )
• ஸ்லைட் ஸோவில் எழுதும் குறிப்புகளை இல்லாமல் செய்ய E
• டாஸ்க்பாரைத் தோன்றச் செய்ய CTRL+T
• டயலொக் பொக்ஸை தோன்றச் செய்ய CTRL+S
• கீபோட் குறுக்கு வழிகளைக் காண F1