Microsoft Equation Editor



கணித சமன்பாடுகளை இலகுவாக டைப்செய்ய

கணித சமன்பாடுகளை டைப் செய்வதற்கென மைக்ரோஸொப்ட் உருவாக்கியிருக்குக்கும் ஒரு மென்பொருள் கருவியே ஈகுவேசன் எடிட்டர். கணித சமன்பாடுகளை எம்.எஸ். வர்ட் போன்ற சொற்செயலி களில் (word Processor) வழமையான முறையில் டைப் செய்தால் அவற்றை நேர்த்தியாக சீரமைக்க (format) முடியாமல் இருக்கும்.

எனினும் இந்த ஈகுவேசன் எடிட்டரைக் கொண்டு கணித சமன்பாடுகளை நேர்த்தியாக டைப் செய்திட முடியும். ஈகுவேசன் எடிட்டரை எம். எஸ். வர்டில் மாத்திரமன்றி எம்.எஸ். ஒபிஸிலுள்ள எக்சல், பவபொயின்ட், எக்ஸஸ், அவுட்லுக்கிலும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். எம்.எஸ். ஒபிஸ் 2000 மற்றும் அதற்குப் பிந்திய பதிப்புக்களில் ஈகுவேசன் எடிட்டர் எனும் இந்த மென்பொருள் கருவி இணைக்கப்படுள்ளது.

இருந்தாலும் ஈகுவேசன் எடிட்டரானது எம்.எஸ். ஒபிஸ் தொகுப்பை கணினியில் நிறுவும்போது டிபோல்டாக நிறுவப்படுவதில்லை. அதனை நாமாகவே நிறுவிக் கொள்ள வேண்டும். இதனைக் கணினியில் நிறுவ வேண்டுமாயின், பின் வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

முதலில் எம்.எஸ்.ஒபிஸ் எக்ஸ்பீ அல்லது 2003 சீடியை உட்செலுத்துங்கள். அடுத்து கண்ட்ரோல் பேணலில் நுளைந்து Add or Remove Programs க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Microsoft Office தெரிவு செய்து Change (படம்-1) பட்டனில் க்ளிக் செய்யுங்கள். பின்னர் தோன்றும் டயலொக் பொக்ஸில் Add or Remove Features (படம்-2) தெரிவு செய்து நெக்ஸ்ட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் டயலொக் பொக்ஸில் Choose advanced customization of applications தெரிவு செய்து (படம்-3) நெக்ஸ்ட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். பின்னர் வரும் திரையில் Office Tools (படம்-4) என்பதற்கு இடது பக்கத்திலுள்ள (+) குறியீட்டில் க்ளிக் செய்ய ஒரு பட்டியல் விரிவடையக் காணலாம். அதிலிருந்து Microsoft Equation Editor என்பதற்கு இடப்புறமுள்ள அம்புக் குறியில் க்ளிக் செய்து தோன்றும் மெனுவிலிருந்து Run from My Computer தெரிவு செய்து Update பட்டனில் க்ளிக் செய்ய உங்கள் கணினியில் ஈகுவேசன் எடிட்டர் நிறுவப்பட்டுவிடும்.

ஈகுவேசன் எடிட்டரை எங்ருந்து ஆரம்பிப்பது?

ஏதேனுமொரு ஒபிஸ் எப்லிகேசனை (உதாரணமாக எம்.எஸ். வர்டை)விதிறந்து கொள்ளுங்கள். எம்.எஸ். வர்ட் விண்டோஸில் Insert மெனுவில் Object தெரிவு செய்யுங்கள். அப்போது வரும் Insert Object டயலொக் பொக்ஸிலிருந்து Create New டேFன் Xழ் Microsoft Equation 3.0 (படம்-5) என்பதைத் தெரிவு செய்ய ஒரு வெறுமையான பணித்தளத் துடனும் ஈகுவேசன் டூல்பாருடனும் கூடிய ஒரு விண்டோ தோன்றும். இந்த டூல்பாடரில் பல்வேறுவகையான கணிதத்துறையில் பயன்பாட்டி லுள்ள எழுத்துக்கள் குறியீடுகளுடன் கூடிய பட்டன்கள் காணப்படு கின்றன. இந்த பட்டன்களில் க்ள்க் செய்வதன் மூலம் தேவை யான சமன்பாடுகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் தட்டச்சு செய்யலாம். இந்த சமன்பாடுகள் வர்டில் கையாளப்படும் படங்கள் மற்றும் வர்ட்ஆட் போன்று ஒரு ஒப்ஜெக்டாகவே உட்செலுத்தப்படும். இந்த சமன்பாடுகளை Picture toolbar கொண்டும் விரும்பிய மாற்றத்திற்கு உட்படுத்தலாம்.

எம்.எஸ். ஒபிஸின் அண்மைய பதிப்பான Microsoft Office 2007 ல் ஈகுவேசன் எடிட்டரானது டிபோல்டாகவே நிறுவப்பட்டு விடுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

-அனூப்-