How to configure Outlook Express for Gmail

அவுட்லுக் எக்ஸ்பிரஸில் ஜிமெயில்

இமெயில் எனப்படும் மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தைக் கூறி உறுதி செய்ததும் எமக்கு வந்திருக்கும் இமெயிதிப் பார்ப்பதும் புAதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெIல் எனப்படும்.

வெப் மெIOல் மெயிலை / அனுப்பும் பெறும் செயற்பாடு வழமையான ஒரு இணைய பக்கத்திலேயே (web page)நடைபெறும். அத்துடன் எமது இமெயில் கணக்கை இணைய இணைப்பில் இருந்தால் (online) மட்டுமே அணுக முடியும். எமக்கு வந்து சேர்ந்த இமெயில்களையும் offline ல் பார்வையிட முடியாது. வெப் மெயில் வசதியை yahoo, hotmail, google போன்ற பல நிறுவனங்களும் இலவசமாகவே வழங்குகின்றன

மாறாக எமது இமெயில் கணக்கை நிர்வகிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் மூலம் மெயில் சேர்வரை அணுகி செய்திகளை அனுப்புவதும் பெறுவதும் பொப் மெயில் எனப்படும். Post Office Protocol என்பதன் சுருக்கமே POP. அத்துடன் இதற்கு உபயோBக்கப்படும் மென்பொருள் இமெயில் க்ளையன்ட் (e-mail client) எனப்படும். Outlook, Outlook Express, Eudora, Thunderbird என்பவற்றை இமெயில் க்ளையன்டுக்கு உதாரணமாகக் குறிபிடலாம்.

இமெயில் க்ளையன்ட் மூலம் நாம் அனுப்ப வேண்டிய இமெயிலை இணையத்தில் இணையாமலேயே (ஓப்லைனில்) வடிவமைத்து பின்னர் இணையத்தில் இணைந்து அனுப்பி விடலாம். அவ்வாறே எமக்கு வந்து சேர்ந்த இமெயில்களையும் ஓப்லைனில் பார்வைIடலாம். அதாவது மின்னஞ்சல்களை எமது கணினிக்கு டவுன்லோட் செய்து விட்டு நாம் விரும்பிய நேரத்தில் படிக்க முடிவதுடன் அனுப்புகின்ற மெயிலை அழகாக format செய்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் இணையத்தில் இணைந்திருக்கும் நேரத்தைக் குறைத் திடலாம்.

அதே வேளை இமெயில் க்ளையன்ட் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு இமெயில் கணக்கு மட்டுமன்றி ஒன்ற்ற்கு மேற்பட்ட இமெயில் கணக்குகளையும் நிர்வகிக்க முடியும். அதன் மூலம் எமது அனைத்து இமெயில் கணக்குகளுக்கும் வந்து சேரும் இமெயில்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும். இது போன்ற பல வசதிகளைப் பொப் மெயில் தருகிறது.

ஆனால் இந்த வசதிகளை அனேகமாக எல்லா இமெயில் சேவை தரும் நிறுவனங்களும் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குகின்றன. எனினும் கூகில் நிறுவனத்தின் G-Mail கணக்கு வைத்திப்போர் பொப் மெயில் வசதியையும் இலவசமாகவே பெறலாம். அதன் மூலம் எமது இமெயில் கணக்குகளை அவுட்லுக் எக்ஸ்பிரஸ், யுடோரா போன்ற க்ளையன்டுகள் மூலம் நிர்வகிக்க முடியும். இங்கு ஜிமெயிலை அவுட்லுக் எக்ஸ்பிரஸில் எவ்வாறு பெறுவது எனப் பார்க்க லாம்.

பொப் மெயில் க்ளையன்டான அவுட்லுக் எக்ஸ்பிரஸ் விண்டோஸஉடன் இணைந்தே வருகிறது. விண்டோஸை Jறுவும் பொதே எமது கணினியில் அவுட் லுக் எக்ஸ்பிரஸ¤ம் நிறுவப்பட்டு விடும். எனினும் அவுட்லுக் எக்ஸ்பிரஸைத் திறந்ததுமே உங்கள் இமெயில் கணக்கை அணுகிட முடியாது. அவுட்லுக் எக்ஸ்பிர¨ஸை முதலில் இமெயில் கணக்குக்கு ஏற்றவாறு கன்பிகர் செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

1. அவுட்லுக் எக்ஸ்பிரஸைத் Aறந்து கொள்ளுங்கள்

2. Tools மெனுCல் Accounts தெEவு செய்யுங்கள். (படம்-1)

3. வரும் டயலொக் பொக்ஸில் Add பட்டனில் க்ளிக் செய்து Mail என்பதைத் தெரிவு செய்யுங்கள். (படம்-2)

4. அடுத்து ஒரு விசர்ட் தோன்றி உங்களை வழி நடத்தும். அங்கு முதலில் Display Name எனுமிடத்தில் உங்கள் பெயரை டைப் செய்து Next க்ளிக் செய்யுங்கள். (படம்-3)

5. அடுத்து வரும் திரையில் உங்கள் இமெயில் முகவரியை டைப் செய்த பின்னர் அடுத்த கட்டத்த்ற்குத் தாவுங்கள். (படம்-4)

6. அடுத்ததாக வரும் டயலொக் பொக்Uல் My incoming mail server எனுமிடத்தில் POP3 என்பதைத் தெரிவு செய்யுங்கள். அத்துடன் Incoming mail server எனுமிடத்தில் pop.gmail.com எனவும் Outgoing mail server எனு மிடத்தில் smtp.gmail.com எனவும் டைப் செய்து நெக்ஸ்ட் க்ளிக்குங்கள். (படம்-5)

7. அடுத்து தோன்றும் பெட்டியில், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இமெயில் கனக்குக்குரிய பெயரையும் பாஸ்வர்டையும் டைப் செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்து Finish பண்ணி விடுங்கள். (படம்-6)

இனி உங்கள் இமெயில் கணக்குக்குரிய மின்னஞ்சல்களை அவுட்லுக் எக்ஸ்பிரஸிலேயே பார்வையிடலாம். இதனை விட இலகுவாக ஜிமெயில் கணக்கை அவுட்லுக் எக்ஸ்பிரஸில் கன்பிகர் செய்வதற்கென ConfigGmail.exe எனப்படும் 54 கேபீ அளவுள்ள ஒரு ச்றிய இலவச யூட்டிOட்டி இனையத்தி லுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து ஒரு முறை ஓட்டி Cட்டால் போதும். தானாகாவே மேற் சொன்ன செட்டிங்ஸ் கணினியில் சேமிக்கப்பட்டு விடும்.

இவ்வாறு கன்பிகர் செய்த பிறகும் உங்கள் இமெயிலை அவுட்லுக் எக்ஸ்பிஸில் அணுக முடியாமயிருந்தால் gmail வெப் தளத்திற்குச் சென்று sign in செய்த பிறகு அங்கு Settings எனும் லிங்கில் க்ளிக் செய்ய வரும் பக்கத்தில் Forwarding and POP எனும் லிங்Bல் க்ளிக் செய்து Enable POP for all mail என்பதைத் தெரிவு செய்த பிறகு மாற்றத்தை சேமித்து விடுங்கள்.

-அனூப்-