What is PDF file?


PDF பைல் என்றால் என்ன?




இலத்திரனியல் ஆவணங்களை கணினி வழியே பதிப்பிக்கவும் பரிமாறவும் என Adobe நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பைல் வடிவமே போட்டபல் டொகுயுமென்ட் போமட் (Portable Document Format) எனும் பீடீஎப் (PDF) பைல்களாகும். இணைய தளங்களிலும் ம்ன்னஞ்சல் ஊடாகவும் மென்பொருள் உதவிக் கறிப்புகள், வழிகாட்டி நூல்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்ற பல வகையான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் பீடீஎப் பைல்களாகவே பரிமாறிக்க கொள்ளப்படுகின்றன. பீடீஎப் பைல்கள் எழுத்துக்கள், வெக்டர் கிரபிக்ஸ், நிழற் படங்கள், அட்டவனணகள், ஹைபலிங்ஸ் எனப் பல்வேறு விடயங்களைத் கொண்டிருக்கும். பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த ஆவணங்களை அறிக்கைகளை வலையமைப்பிலோ, இணையத்திலோ வெளியிட இந்த பீடீஎப் பைல்களையே பெரிதும் நம்பியிருக் கின்றன

பீடீஎப் பைல்கள் ஏனைய பைல் வகைகளை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. விண்டோஸ், மெக்கின்டோஸ், யுனீக்ஸ், லினக்ஸ் என எந்தவொரு இயங்கு தளத்திலும் பீடீஎப் பைல்களை திறந்து பார்க்க முடியும் அதேபோல் கையடக்கக் கணிகள் உட்பட எவ்வகையான கணினிகளிலும். அதனை உருவாக்காப்பட்ட அதே வடிவில் எந்த மாறுதலும் இல்லாமல் ஒரே விதமாகாப் பர்வைIடலாம்.

மாறாக HTML பைலை எடுத்துக் கொண்டால் அது வெவ்வேறு பிரவுசர்களில் வெவ்வேறு விதமாகத் தோற்றமளிக்கும். அதேபோல் ஒரு கணினியில் உருவாக்Bய ஒரு (MS-Word) வேர்ட் டொகுயுமென்டை வேறொரு கணினில் திறந்து பார்க்கும்போது உரிய Font கணினியில் இல்லாதிருந்தால் அந்த ஆவணத்தை வாசிக்க முடியாதிருக்கும். உரிய எழுத்துருவை நிறுவிய பிறகே அதனைத் திறந்து பார்க்கலாம். ஆனால் பீடிஎப் பைல் போமட்டில் இந்த பொன்ட் பிரச்சினைக்கே இடமில்லை. உரிய பொன்ட் கணினியில் இல்லாவிட்டாலும் கூட பீடீஎப் பைல்களைத் திறந்து பார்க்கலாம். பீடீஎப் பைல் வகைகளைப் பலரும் விரும்புவதற்கு இதுவே முக்கிய காரணம் எனலாம்.

பீடீஎப் பைலை எந்த வகைக் கணினியிலும் எவரும் திறந்து பார்க்க முடிந்தாலும் அதிகாரமற்றவர்கள் அதனைத் திறந்து பார்க்க, அச்சிட, மாற்றங்கள் செய்ய, தேவையான பகுதியைப் பிரதி செய்ய முடியாத வகையில் பாஸ்வர்ட் மூலம் பாதுகக்கவும் முடியும்.

பீடிஎப் பைல்களைத் திறந்து பார்வையிடவும், அச்சிடவும் எடோபீ நிறுவனத்தின் தயாரிப்பான அடோபீ (அக்ரொபெட்) ரீடர் (Adobe Reader) அல் லது அதற்கு நிகரான அடோபீ குடும்பத்தைச் சார்ந்த வேறு ஏதேனுமொரு மென்பொருள் அவசியம். அதேபோல் இன்டனெட் எக்ஸ்ப்ளோரர், மொஸில்லா பயபொக்ஸ் போன்ற வெப் பிரவுஸர்களிலும்கூட அதற்குரிய ப்லக்-இன் கணினியில் நிறுவப்பட்டிருப்பின் பீடீஎப் பைலை திறந்து கொள்ளலாம்.

எடோபீ ரீடர் மென்பொருளை எடோபீ நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது எடோபீ ரீடர் 8 எனும் பதிப்பு வெளியாகியுள்ளது. அதே வேளை எடோபீ ரீடர் மூலம் பீடீஎப் பைல்களை திறந்து பார்க்க அல்லது வாசிக்க (read) மட்டுமே முடியும். புதிதாக பீடீஎப் பைல்களை உருவாக்கவோ அல்லது அதனை எடிட் செய்யவோ முடியாது.

புதிதாக பீடிஎப் பைல்களை உருவாக்கவென (write) எடோபீ நிறுவனத்தால் உருவாக்கப் பட்டிருப்பது Adobe Acrobat மற்றும் Adobe LiveCycle எனும் மென்பொருள்கள். இவை மட்டுமன்றி பீடீஎப் பைல்களை உருவாக்கும் வசதி எடோபீ நிறுவனத்தின் பதிப்புதுறை (Desktop Publishing) சார்ந்த வேறு மென்பொருள்களிலும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பீடீஎப் பைல்களை உருவாக்கக் கூடிய பிற நிறுவனங்களின் மென்பொருள்களும் இணையத்தில் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன.

எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பின் அண்மைய பதிப்பான ஒபிஸ் 2007 லும் கூட இந்த வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எஸ். வேர்டிலோ எக்சலிலோ உருவாக்கப்பட்ட பைலை பீடிஎப் பைலாக இலகுவாக மாற்றிக்கொள்ளலாம்.

-அனூப்-