How to start your on blog?


எண்ணங்களைப் பதிவு செய்யும் Blog எனும் வலைப்பதிவு!



ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதனை இணையத்தில் உலாவ விட்டு அடுத்தவர்களின் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் உங்களுக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் ஒரு இணையதளத்தை வடிவமைப்பது முதல் பதிவேற்றம் செய்வது வரையான பல நுட்பங்களை அற்ந்திருக்க மாட்டீகள். அப்படியே அறிந்திருந் தாலும் domain name registration, hosting, designing, uploading எனப் பல செலவுகளும் காத்திருக்கும். நேர விரயம் கூட உண்டு.

உங்களைப் போன்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற் காகவே இணையத்தில் கிடைக்கிறது ப்ளொக் எனும் வலைப்பதிவு. தற்போது இணைய தளங்களை உருவாக்குவதை விட வலைப்பதிவுகளின் உருவாக்கத்திலேயே பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இணையதளம் (website), வலைப்பதிவு(blog) இரண்டும் அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் வலைப்பதிவு எனப்படுவது வழமையான இணையதளத்திலி ருந்து சற்றே மாறு பட்டது. Blog எனும் சொல் Web Log எனும் இரண்டு ஆங்கில வார்த்தைகளிலிருந்து பிறந்தது. அத்துடன் வலைப்பதிவாளரை Blogger என்றும் அழைப்பர்.

இணையதளம், வலைப்பதிவு இரண்டிற்குமிடையில் என்னென்ன வேறுபா டுகள் உள்ளன என்பதைச் சொல்வதை விட வலைப்பதிவில் என்னென்ன வசதிகள் கிடைக்கின்றன எனப் பார்க்கலாம்.

அன்றாடம் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்வதை ஆங்கிலத்தில் ஜெர்னல் (journal) எனப்படுகிறது. வலைப்பதிவு என்பதும் ஒரு வகை (நாட் குறிப்பேடு) ஜெர்னல்தான். வலைப்பதிவை ஒரு இணைய நாட்குறிப்பேடு (online journal) என அழைக்கிறார்கள். இந்த வலைப்பதிவில் இதனைப் பற்றித்தான் சொல்ல வேண்டும்; இதனைப் பற்றிப் பேசக் கூடாது என்ற வரையறை இல்லை. யாரும் எதனைப் பறறியும் எழுதலாம். அது ஒரு தனிப்பட்ட விடயமாக, குடும்ப விடயமாக, நாட்டு நடப்பு, அரசியல், விளையாட்டு, சினிமா, விஞ்ஞானம், தொழில் நுட்பம், வரலாறு, சுற்றுலா, சமயம், கதை, கவிதை, கல்வி, காதல் என எதுவாகவும் இருக்கலாம். அதேவேளை சொல்லும் விடயம் யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தாதவாறும் இருத்தல் அவசியம். ஏனெனில் அவதூறு செய்து சிறையில் தள்ளப்பட்ட ப்ளொக்கர்களும் நிறையவே உண்டு.

போன்ற உங்கள் சொந்த அனுபவங்கள் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள், கற்பனைகள், நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்கள் பற்றிய உங்கள் மனக் குமுறல்கள் என அனைத்தையும் கொட்டித் தீர்க்கும் இடமே வலைப்பதிவு. (வழமையான இணைய தளங்களில் இது போன்ற விடயங்களைப் பார்க்க முடியாது)

கொஞ்சம் எழுத்தாற்றல், கொஞ்சம் தொழிநுட்ப அறிவு இவையிரண்டும் இருந்தால் நீங்களும் ஒரு வலைப் பதிவைப் முறையாகப் பேணி வரலாம். ஆனால் நான் மேலே உதாரணமாகக் குறிப்பிட்டது போன்ற விடயங்களாக அல்லாமல் உருப்படியான, உபயோகமான தகவல்களாய் இருப்பது நல்லது. மேலும் வலைப்பAவானது ஒரு கலவையாக அல்லாமல் குறிப்பிட்ட ஒரு விடயம் சார்ந்ததாகவும் இருக்கலாம்.

வலைப்பதிவானது வெறும் உரைப்பகுதியாகவே இருப்பதும் அதனைப் பார்வையிடுபவர்களுக்கு சலிப்பைத் தரும். அதனால் உரையுடன் படங்கள், வீடியோ, கிரபிகஸ், இசை என்பவற்றையும் இணைத்து விடலாம். உங்களுக்கு எழுத்தாற்றல் இல்லையானால் உங்கள் கேமராவில் பதிவு செய்த நிழற்படங்கள் கொண்டு வலைப்பதிவிடலாம்.

வலைப் பதிவானது அதன் பதிவாளர்களால் அடிக்கடி update செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும். நாளாந்தம் அல்லது வாராவாரம் புதிது புதிதாக செய்திகள் ஆக்கங்கள் பதியப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஒரே நாளில் ஒரு தடவைக்கு மேல் அப்டேட் செய்பவர்களும் உள்ளனர். புதிதாக ஆக்கங்கள் சேர்க்கப்படும்போது பழையவை அழிந்து போய் விடுமா என்றால் இல்லை. பழையவையும் காப்பகத்டதில் கோர்வையாக சேமிக்கப்படும். எந்த ஆக்கம் எப்போது என்ன திகதியில் எந்த நேரத்தில் சேர்க்கப்படது போன்ற விடயங்களும் கூட அப்படியே இருக்கும்.

வலைப்பதிவிலுள்ள ஆக்கங்களை வாசிப்பவர்கள் தாங்கள் கருத்துக்க ளையும் (comments)வலையில் பதியலாம். விமர்சிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். கருத்துக்கள் பறிமாறலாம். பார்வையாளர்களின் கருத்துக்களும் கூட காப்பகத்தில் சேமிக்கப்படும். வாசகர் வட்டம் போல் வலைப்பதி வாளர்கள் பல பேர் இணைந்த வலைப்படதிவாளர் வட்டங்கள் கூட உண்டு.

இணையதளங்களில் போன்றே ப்ளொக் தளங்களிலும் hit counter, GeoCounter, Links என்பவற்றையும் செருகலாம். அத்துடன் உருவாக்கிய வலைப்பதிவை உலகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்காமல் உங்கள் பதிவுகளை நீங்கள் விரும்பும் ஒரு குழுவினர் மட்டுமே பார்வையிடுமாறும் செய்யலாம்.

வலைப்பதிவை உருவாகுவது எப்படி?

ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் இணைய வசதியுடன் கூடிய ஒரு கணினி இருந்தால் போதும். ஒரு ப்ளொக் தளத்தை நீங்களும் உருவாக்கி விடலாம்.

ப்ளொக் தளங்களை உருவாக்கும் வசதியை ஏராளமான நிறுவனங்கள் இமெயில் சேவை வழங்குவதுபோல் இவசமாகவே வழங்குகின்றான. இவற்றுல் கூகில் நதிறுவனத்திற்குச் சொந்தமான Blogger மற்றும் Word Press என்பன இலவச ப்ளொக் தளம் அமைத்துக் கொடுப்பதில் பிரபல்பயம் வாய்ந்தன.

Blogger தளத்தின் மூலம் ஒரு வலைப் பதிவை எவ்வாறு உருவாக்குவதென்பதை இங்கே விளக்கலாமென நினைக்கிறேன். blogger தளத்தின் மூலம் ஒரு வலைப் பதிவை மூன்று படி நிலைகளில் மூன்றே நிமிடத்தில் உருவாக்கி விடலாம். அதற்கு நீங்கள் இணைய தளம் உருவாக்கம் பற்றிய அறிவோ அல்லது பெரிய கணினி நிபுணராகவோ இருக்க வேண்டியதில்லை. இணையப் பயன்பாட்டில் சிறிதளவு அனுபவத்துடன் ஓரளவு டைப்பிங் செய்யக் கூடியவாராகவும் இருந்தாலே போதும்.

உங்கள் வலைப்பதிவை தமிழிலேயே பதிப்பிக்கலாம். தமிழில் பதிப்பிப்பதற்குப் புதிதாக எந்த எழுத்துருவையும் நிறுவ வேண்டியதில்லை. Phonetic முறையில் தமிழில் உள்ளீடு செய்யக் கூடிய வசதியையும் தருகிறது ப்ளொக்கர் தளம். அத்துடன் எம்.எஸ். வர்டில் டைப் செய்ததை அப்படியே ப்ளொக்கர் தளத்திற்கு பதிவேற்றவும் முடியும். ப்ளொக் தளத்தை உங்கள் விருப்பம்போல் (customization) மாற்றியமைக்கக் கூடிய வசதியையும் Blogger தருகிறது.

முதலில் www.blogger.com தளத்திற்குச் செல்லுங்கள். blogger தளத்தின் முதல் பக்கத்தில் create your blog now (படம்-1) எனும் லிங்கில் க்ளிக் செய்யுங்கள். அதன்மூலம் முதற் படிக்கு அழைத்துவரப்படுவீர்கள். இங்கு நீங்கள் ஒரு கூகில் கணக்கை (Google Account)உருவாக்க வேண்டயிருக்கும் (படம்-2). ஏற்கனவே உங்களிடம் கூகில் கணக்கு இருந்தால் sign in செய்து அடுத்த கட்டத்திற்குத் தாவலாம்.

கூகில் கணக்கு இல்லாதவர்கள் ஒரு ஈமெயில் முகவரியையும் பாஸ்வர்டையும் சமர்ப்பித்து கூகில் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம். இமெயில் முகவரியானது ஒரு ஜிமெயில் முகவரியாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அடுத்து Continue பட்டனில் க்ளிக் செய்து இரண்டாவது கட்டத்திற்கு வாருங்கள்.

இரண்டாவது கட்டத்தில் Blog தளத்திற்கான பெயரையும் (படம்-3) இணைய முகவரியையும் வழங்க வேண்டும். தலைப்பு என்பது பிரவுசரின் டைட்டில் பாரில் தோன்றும் தலைப்பாகும். ப்ளொக்கர் தளத்தில் வலைப்பதிவிற்குரிய முகவரி http: //name.blogspot.com எனும் வடிவத்தில் இருக்கும். உதாரணமாக ப்ளொக் முகவரியாக சிவா எனக் கொடுத்தால் siva.blogspot.com என அமையும். ஆனால் ஒரே முகவரியில் ஒருவர் மாத்திரமே இருக்கலாம் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அடுத்து Continue பட்டனில் க்Dக் செய்து பயணத்தைத் தொடருங்கள்.

இப்போது தளத்திற்கு நீங்கள் விரும்பும் ஒரு டெம்ப்லேட்டைத் (படம்-4) தெரிவு செய்து Continue பட்டனில் க்ளிக் செய்ய Your blog has been created (படம்-5) என்ற செய்தியைக் காணலாம். இப்போது ப்ளொக் தளம் உருவாக்கியாச்சு. இப்போது Start blogging பட்டனில் க்ளிக் செய்ய வரும் திரையில் Posting டேபில் (படம்-6) க்ளிக் செய்து உங்கள் ஆக்கங்களைப் பதிப்பிக்க ஆரம்பிக்கலாம்.

உங்கள் ஆக்கங்களைத் தமிழில் பதிப்பிக்க Settings டேபில் Global settings பகுதியில் Enable transliteration (படம்-7)என்பதை Enable செய்து அதன் பக்கத்திலுள்ள பெட்டியில் தமிழ் மொழியைத் தெரிவு செய்து Save settings க்ளிக் செய்யுங்கள். இப்போது Posting டேபில் க்ளிக் செய்ய Phonetic முறைIல் தமிழில் உள்ளீடு செய்யலாம். அது மட்டுமன்றி வலைப் பயதிவிலுள்ள சூட்சுமங்களை நீங்களாகவே ஓரிரு வாரங்களில் கற்றுக் கொள்ளலாம்.

-அனூப்-