MS-Office Vs Star Office



அலுவலக உபயோகத்திற்கான மென்பொருள் தொகுப்புக்கDல் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் எம். எஸ். ஒபிஸ் தொகுப்பை அறியாதார் எவருல்மிலை எனச் சொல்லலாம். அந்த அளவு இந்த எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பு உலகளவில் கணினிப் பயனர்களிடையே பிரபல்யம் பெற்று விளங்குகிறது. எனினும் எம்.எஸ். ஒபிஸ் தொகுப்பிற்குப் போட்டியாக மேலும் பல நிறுவனங்கள் அலுவலக உபயோகத்திற்கான மென்பொருள்களை வெளிIட்டு வருகின்றன. ஸ்டார் ஒபிஸ், ஓபன் ஒபிஸ், கே-ஒபிஸ், லோட்டஸ் ஒபிஸ், கொரல் ஒபிஸ், சக்தி ஒபிஸ் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இங்கு ஸ்டார் ஒபிஸ் பற்றி சிறிது அலசலாம் என நினைக்கிறேன்.

ஜாவா எனும் கணினி மொழியை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்Aன் தயாடரிப்பே இந்த ஸ்டார் ஒபிஸ் மென் பொருள் தொகுப்பாகும்.

ஸ்டார் ஒபிஸ் தொகுப்பில் StarWriter எனும் வேர்ட் ப்ரொஸஸ்சர் , StarCalc எனும் ஸ்ப்ரெட்சீட் , StarImpress எனும் ப்ரசன்டேசன் , StarDraw எனும் கிரபிக்ஸ், StarBase எனும் டேட்டா பேஸ் மெனேஜ்மன்ட் சிஸ்டம் ஆகிய மென்பொருள்கள் அடங்கியுள்ளன. இவை எம்.எஸ்.ஒFஸ் தொகுப்Fல் அடங்Bயுள்ள வேர்ட், எக்ஸல், பவர்பொIன்ட், எக்ஸஸ், பப்லிஸர் என்பவற்றிற்கு நிகரானவை எனலாம்.

ஸ்டார் ரைட்டர்
எம்.எஸ்.வேர்டிற்கு நிகரானது ஸ்டார் ரைட்டர். ஏற்கனவே எம்.எஸ்.வேர்டில் பரிச்சயமுள்ளவர்களா¡ல் இலகுவில் ஸ்டார் ரைட்டருக்கு மாறிவிடலாம். எம்.எஸ். வர்டில் கிடைக்கும் பல வசதிகள் ரைட்டரில் உள்ளன. எம்.எஸ். வேர்டில் உருவாக்கிய பைலை ரைட்டரில் திறக்க முடிவதுடன் ரைட்டரில் உருவாக்கிய பைலை எம்.எஸ்.வேர்டில் திறக்கக் கூடிய வசதியுமுள்ளது. கூடுதல் வசதியாக ஒரு ரைட்டர் டொகுயுமென்டை பீடீஎப் பைலாக சேமிக்கவும் முடிகிறது.

ஸ்டார் கெல்க்
எக்சல் போன்ற ஒரு ஸ்ப்ரெட்சீட் மென்பொருளே இந்த ஸ்டார் கெல்க். கெல்க் டொகுயுமென்டை எக்சலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கெல்கில் உள்ள 250 ற்கும் மேற்பட்ட பன்க்சன்கள் கணக்கியல் வேலைகளை எளிமையாக்குகின்றன.

ஸ்டார் இம்ப்ரெஸ்
மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் பவர்பொயின்டுக்கு இணையான ஸ்டார் இம்ப்ரெஸ் ஏராளமான எனிமேசன் இபெக்ட்ஸ், ட்ரான்ஸிசன் இபெக்ட்ஸ் கொண்டுள்ளது. எம்.எஸ். பவர் பொயின்டோடு ஒத்திசைவதோடு ஸ்டார் இம்ப்ரெஸ் மூலம் உருவாக்கப்பட்ட பிரசன்டேசனை இணையத்தில் வெளியிடத் தக்கதாக .html பைலாகவோ எடோபீ ப்லேஸ் ப்ளேயரில் இயங்கத் தக்கதாக .swf பைலாகவோ சேமிக்கக் கூடிய வசதியையும் தருகிறது.

ஸ்டார் ட்ரோ
ஸ்டார் ஒபிஸில் அடங்கியுள்ள ஒரு முக்கியமான கிரபிக் மென்பொருள் இந்த ஸ்டார் ட்ரோ. எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பில் இதற்கு நிகரான ஒரு மென்பொருள் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனினும் இதனை மைக்ரோஸொப்ட் பெயின்ட், பப்லிசர், கோரல் ட்ரோ போன்றவற்றுடன் ஒப்பிடலாம். இதன் மூலம் இரு பரிமாண வெக்டர் கிரபிக்ஸ் படங்களை உருவாக்கலாம். ஸ்டார் ட்ரோ கொண்டு உருவாக்கிய கிரபிக்ஸை bmp, gif, jpeg, tiff, png போன்ற ஏராளமான பைல் போமட்டுகளில் சேமித்துக் கொள்ளலாம். அத்துடன் பீடீஎப். ப்லேஸ் போமட்டுகளில் மாற்றவும் முடியும்.
ஸ்டார் பேஸ்
இது எம்.எஸ்.எக்சஸ் போன்ற ஒரு தரவுத் தள மேலாண்மை மென்பொருள். இது எம்.எஸ்.எக்ஸஸ் தவிர மேலும் 10 வகையான டேட்டா பேஸ் பைல்களை ஆதரிக்கின்றன. டேபல், குவரீஸ், போம்ஸ், ரிப்போட்ஸ் என டேட்டா பேஸ் ஒப்ஜெக்டுகள் ஸ்டார் பேஸிலும் உள்ளன.

தற்போது இந்த ஸ்டார் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிபிபான ஸ்டார் ஒபிஸ் 8 கிடைக்கிறது. ஆரம்பத்தில் இலவச பதிப்பாகவிருந்த ஸ்டார் ஒபிஸ் தற்போது விலைக்கே கிடைக்கிறது. எனினும் எம்.எஸ். ஒபிஸை விட மிக மலிவாக 70 அமெரிக்க டொலருக்கு வாங்வி விடலாம்.

ஸ்டார் ஒபிஸ் தொகுப்பை ஆரம்பத்தில் ஸ்டார் டிவிசன் எனும் ஜேர்மன் நிறுவனமே உருவாக்கியது. பின்னர் அதனை ஸ்டார் டிவிஸனிடமிருந்து விலைக்கு வாங்கியது சன் மைக்ரோ சிஸ்டம்ஸ். மைக்ரோஸொப்ட் நிறுவனத் தின் ஏக போக மென் பொருள் ராஜ்யத்தை வீழ்த்தும் எண்ணத்தில் ஸ்டார் ஒபிஸின் சோர்ஸ் கோடை (source code) எவரும் பதிவிறக்கி அதனை மேம்படுத்தும் விதத்தில் இணையத்தில் ஓபன் ஒபிஸ் (openoffice.org)எனும் பெயரில் வெளியிட்டது. ஒபன் ஒபிஸ், ஸ்டார் ஒபிஸ் இரண்டும் ஒரே சோர்ஸ் கோடிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. எனவே இரண்டுக்கும் இடைIல் பெருத்த வேறுபாடுகள் இல்லை என்றே கூறலாம். ஓபன் ஒபிஸ் எனும் பெயரில் சோர்ஸ் கோடை வெளியிட்டாலும் ஸ்டார் ஒபிசைக் கைவிடவில்லை சன்மைக்ரோ சிஸ்டம்ஸ். ஸ்டார் ஒபிஸ் வியாபார நோக்கில் உருவாக்கப்படுவதால் மேலும் சில மேன் பூச்சுக்களைக் கொண்டுள்ளது ஸ்டார் ஒபிஸ். எனினும் ஓபன் ஒபிஸ் இலவசமாகவே கிடைக்கிறது

ஸ்டார் ஒபிஸ் போன்றே ஒப்பன் ஒபிஸிலும் ரைட்டர், கெல்க், இம்ப்ரெஸ், பேஸ் என மென்பொருள்கள் அடங்கியுள்ளன. ஓபன் ஒபிஸ் 2 மென்பொருள் தொகுப்பை openoffice.org எனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அதே வேளை லினக்ஸ் இயங்கு தளத்துடன் ஓபன் ஒபிஸ் தொகுப்பும் இணைந்தே வருகிறது. லினக்ஸின் ரெட்ஹெட், சொலாரிஸ் பதிப்புகளில் ஓபன் ஒபிஸ் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. எனவே லினக்சஸ நிறுவும் போது இந்த ஓபன் ஒபிஸ் மென்பொருள் தொகுப்பும் நிறுவப்பட்டு விடும் .
இதே போல் லினக்ஸ் இயங்கு தளத்துடன் இலவசமாக வரும் மற்றுமொரு ஒபிஸ் தொகுப்பு கே-ஒபிஸ் ஆகும். கே-வர்ட், கே-ப்ரசென்டர், கே-ஸ்ப்ரெட், கே-எக்U தவிர மேலும் சில சிறிய எப்லிகேசன்களும் இதில் அடங்கும். இதனை koffice.org எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாகவே பெறலாம்.

தமிழ் நாட்டின் தலை நகரான சென்னையிலிருந்தும் ஒரு ஒபிஸ் தொகுப்பு வெளியாகியுள்ளது. சக்தி ஒபிஸ் எனும் இம்மென்பொருள் தொகுப்பு தமிழ் உட்பட ஏனைய இந்திய மொளிகள் பலவற்றை ஆதரிக்கின்றன. எனினும் இதனை இலவசமாகப் பெறமுடியாது. சக்தி ஒபிஸ் பற்றிய மேலும் விவரங்களை chennaikavigal.com எனும் இணைய தலத்திலிருந்து பெறலாம்.


இது போல் எத்தனை ஒபிஸ் தொகுப்புக்கள் வந்தாலும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பை யாராலும் வீழ்த்த முடியாது. எம்.எஸ்.ஒபிஸே அனைத்திலும், எப்போதும் முன்னணினில் திகழும் என்பது என் எண்ணம்.
-அனூப்-